தோழர் கே.எம்.ஹரிபட் நினைவுதினம் அனுசரிப்பு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>தோழர் கே.எம்.ஹரிபட் நினைவுதினம் அனுசரிப்பு</strong></p>
<p>தருமபுரி, ஜன.22- சிபிஎம் தருமபுரி மாவட்ட ஸ்தாபகத் தலைவரான தோழர் கே.எம்.ஹரிபட் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் கட்சி ஸ்தாப னத்தை அமைத்தவர் தோழர் கே.எம்.ஹரிபட். ஓசூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கி, தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுத்தர போராடியவர். உழைப்பாளி மக்களுக்காகவும் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இவரின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. தருமபுரி, செங்கொடிபுரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.என்.மல்லையன், எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச் சந்திரன், கே.பூபதி, கே.ஆர்.சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
