தோழர் டி.பி.முத்துச்சாமி நினைவு தினம் அனுசரிப்பு!
10 Mar 2026, 3:51 pm
<p><strong>தோழர் டி.பி.முத்துச்சாமி நினைவு தினம் அனுசரிப்பு!</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 10- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி.பி.முத்துச் சாமி-யின் நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் டி.பி.முத்துச்சாமி யின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வா யன்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உரு வப்படத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநிலக்குழு உறுப் பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். அதே போல், மூலப்பாளையம் பகுதியில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எஸ்.அய்யாசாமி தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன் ஆகியோர் தோழர் முத்துசாமி நினைவுகளை பகிர்ந்த னர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, தாலுகாக்குழு உறுப்பினர் பி.அன்பு ஜனாதி பதி, கிளைச் செயலாளர், என்.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கொல்லம் பாளையம் கிளைச் செயலாளர் சி.பூர்ண சந்திரன் நன்றி கூறினார். இதன்பின் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.</p>
