தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

6 Dec 2025, 2:48 pm
சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு</strong></p> <p>தருமபுரி, டிச.6- சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு &nbsp;தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு, மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டா மை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில் மரியா தை செலுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் 70 ஆம் &nbsp;ஆண்டு நினைவு தினம் சனியன்று நாடு &nbsp;முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் படி, தருமபுரி அரசு மருத்துவமனை &nbsp;அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி சார்பில் மாலை அணிவித்து &nbsp;மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ் வில் அமைப்பின் மாவட்டச் செயலா ளர் ஏ.சேகர், மாவட்ட நிர்வாகிகள் ஏ. மாதேஸ்வரன், சி.காவேரி, திராவிடர் &nbsp;கழக மாநில அமைப்பு செயலாளர் &nbsp;ஊமை.ஜெயராமன், விசிக மாவட்ட நிர் வாகி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோன்று, அரூர் ரவுண்டானா &nbsp;அருகே உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் பி.குமார், மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, &nbsp;விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஏ. நேரு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளர் பி.வி.மாது உள் ளிட்டோர் மாலை அணிவித்து மரியா தை செலுத்தினர். அரூர் வட்டத்திற்குட் பட்ட கீழானூர் கிராமத்திலுள்ள அம் பேத்கர் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணியின் மாநில துணைத்தலை வர் எம்.முத்து தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. தருமபுரியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, தலைவர் ஏ.ஜெயா, வட்டத் தலைவர் கே.பூபதி, செயலாளர் தமிழ்மணி, நக ரச் செயலாளர் நிர்மலா ராணி உட்பட &nbsp;பலர் மரியாதை செலுத்தினர். இதன் பின் &lsquo;அரசியலமைப்பு சட்டத்தை பாது காப்போம்&rsquo; என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஈரோடு ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா வில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனி சாமி தலைமையில் மாலை அணிவிக் கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் மா. அண்ணாதுரை, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயராக வன், எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூலப் பாளையம், நசியனூர், ஊனாத்திப்பு தூர், வெண்டிபாளையம் உள்ளிட்ட பகு திகளில் அம்பேத்கர் நினைவுதினம் &nbsp;அனுசரிக்கப்பட்டது. இதில் சிபிஎம் &nbsp;மூத்த தோழர் கே.துரைராஜ், தாலுகா &nbsp;செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, &nbsp;பி.லலிதா, ஆர்.மாரிமுத்து, என்.பழனி சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சத்தியமங்கலத்தில் நடைபெற்ற &nbsp;நிகழ்விற்கு, தீண்டாமை ஒழிப்பு முன் னணி ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி &nbsp;தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் &nbsp;செயலாளர் கே.மாரப்பன் முன்னிலை யில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அந்தி யூர் ரவுண்டானாவில் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன் தலைமையில் அவ ரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட் டது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற &nbsp;வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள முழு உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பி னர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரப் &nbsp;பகுதியில் நடைபெற்ற நினைவு தின &nbsp;நிகழ்ச்சிக்கு, விசிக மாவட்ட முன் னாள் செயலாளர் க.சகாதேவன் தலை மை வகித்தார். இதில் திமுக நகரச் செய லாளர் இளஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், வெண் ணிலா, சிபிஐ மாவட்ட துணைச்செயலா ளர் குணசேகரன், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் ராசி ரவிக்குமார், விசிக &nbsp;மகளிர் விடுதலை இயக்க அமைப்பா ளர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு சார்பில் காமராஜர் நகர் மூன்றாவது வீதியில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செய லாளர் சி. பத்மநாபன், நகரச் செயலா ளர் கே.சுபாஷ், மாவட்டக் குழு அலு வலக பொறுப்பாளர் ராமசுப்பிரமணி யம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோன்று தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணியின் கோவை மாவட்டக்குழு &nbsp;சார்பில் புலியகுளத்தில் நடைபெற்ற &nbsp;நிகழ்விற்கு தீஒமு மாவட்டச் செயலா ளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். &nbsp;திராவிட கழகத்தின் தலைமை கழக &nbsp;பேச்சாளர் வீரமணி, தீஒமு முன்னாள் &nbsp;மாநிலக்குழு உறுப்பினரும், வழக்கறிஞ ருமான ஆறுச்சாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். காளப்பட்டியில் &nbsp;நடைபெற்ற நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனக ராஜ், தீஒமு மாவட்டத் தலைவர். ஆர். மகேஸ்வரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பாரதி, எஸ்எஸ் குளம் ஒன்றியச் செயலாளர் வெள்ளிங்கிரி ஆதித்தமிழர் பேரவை பிரபாகரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் நுழைவு வாயில் முன்பு &nbsp;வழக்கறிஞர்கள் சார்பாக அம்பேத்க ரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, &nbsp;அவர் வகுத்துக் கொடுத்த அரசியல் &nbsp;சட்டத்தை பாதுகாப்போம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் &nbsp;மதுரை, திருப்பரங்குன்றம் கார்த்திகை &nbsp;தீப விவகாரத்தில் மத நல்லிணக் கத்தை குழைக்கும் வகையில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத் துவா சக்திகளின் நடவடிக்கையை கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உயர்நீதி மன்ற நீதி பதி ஜி.ஆர்.சாமிநாதனின் ஒருதலை பட் சமான நடவடிக்கை கண்டித்தும், அகில &nbsp;இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் என்.ராமர் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. ஜோதிகுமார் முன்னிலை வகித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய &nbsp;செயலாளர் ச.பாலமுருகன் கண்டன &nbsp;உரையாற்றினார். இதில், அகில இந்திய &nbsp;வழக்கறிஞர் சங்க மாநிலப் பொருளா ளர் எஸ்.மாசேதுங், மாவட்டப் பொருளா ளர் ஜி.சுப்பிரமணியன், மாநிலக் குழு &nbsp;உறுப்பினர்கள் ஆர்.கோபால்சங்கர், &nbsp;எஸ்.ராஜசிம்மன் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங் கேற்றனர். அம்பேத்கருக்கு சிலை நிறுவுக கோவை மாநகரின் மையப் பகுதி யில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க &nbsp;நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், &nbsp;மாவட்டத் தலைவர் ராஜா, செயலா ளர் தினேஷ் ராஜா, துணை நிர்வாகி &nbsp;குரு சாரதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜுல்பி அகமது உள்ளிட் டோர் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி னர். நாமக்கல் நாமக்கல், திருச்செங்கோடு நரி &nbsp;பள்ளத்தில் அமைந்துள்ள அண்ணல் &nbsp;அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சியில், சிபிஎம் மூத்த &nbsp;தோழர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேஷ் பாண்டியன், &nbsp;நகரச் செயலாளர் சீனிவாசன், முன் னாள் ஒன்றிய சிபிஎம் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். &nbsp;சேலம் சேலம் அரசு இருபாலர் கலைக் &nbsp;கல்லூரி அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இதில் தீஒமு மாவட்டத் தலை வர் ஆர்.குழந்தைவேல், மக்கள் &nbsp;ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் &nbsp;எம்.சேது மாதவன், மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மேட்டூர், சங்ககிரி, &nbsp;பனமரத்துப்பட்டி, ஆத்தூர், பெத்தநா யக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் அம்பேத்கர் நினைவுதினம் அனு சரிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில், தீஒமு மாவட்டச் செயலாளர் வி. &nbsp;இளங்கோ, தவிச மாவட்டச் செயலாளர் &nbsp;ஏ.ராமமூர்த்தி, நிர்வாகி சரவணன், தீஒமு மற்றும் மாதர் சங்க நிர்வாகி கள் செந்தில் எம்.ராமசாமி, எ.கலிய பெருமாள், கே.காளிதாஸ், எ.கந்தன் &nbsp; க.பெருமா, என்.மேதினம், சி.இந்தி ராணி, மாணவர் சங்க மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் செல்வம், நவீன், &nbsp;நிர்வாகிகள் ரிஷி, தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.