அருப்புக்கோட்டை தோழர் கு.கந்தசாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>அருப்புக்கோட்டை தோழர் கு.கந்தசாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு</strong></p>
<p>அருப்புக்கோட்டை, டிச.28- அருப்புக்கோட்டை திரு நகரம் பகுதியைச் சேர்ந்த வர் கு.கந்தசாமி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவராகவும், நகர் மன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். இந்நிலையில், கு.கந்த சாமியின 38வது நினைவு தினத்தையொட்டி திருநக ரம் பகுதியில் அவரது உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். மூத்த தோழர்கள் எஸ்.காத்த முத்து, கு.குருசாமி, என். கணபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். துவக்கி வைத்து நகர் செயலாளர் எம். பரமதயாளன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.முருகன் விளக்கிப் பேசினார். எஸ்.பழனிச்சாமி, எஸ்.கருப்பசாமி, எஸ்.அருண்மொழி, எஸ்.முத் துச்சாமி, நாகலிங்கம், வீர வேல் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.</p>
