வியந்து மகிழ வெளியே வா! - ச அன்பழகன்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>வியந்து மகிழ வெளியே வா! - ச அன்பழகன்</strong></p>
<p>வெளியே வா! வெளியே வா! வெள்ளை நிலவே வெளியே வா! சின்னப் பையா வெளியே வா! செல்லப் பாப்பா வெளியே வா! பிஞ்சு விரல்கள் வலிக்கவே வீட்டுப் பாடம் எழுதினாய்! களைத்து ஏனோ போனாயே? கவலை விட்டு வெளியே வா! (வெளியே வா...) சின்னக் கையும் காலையும் மடக்கி அமர்ந்து பார்த்தாயே! டிவி பார்த்துச் சோர்வடைந்த கண்ணே உடனே வெளியே வா! (வெளியே வா...) நிலவைக் காட்டிச் சோறூட்டி நிழலைத் தேடி விளையாடி வளர்த்த அன்புத் தாயையும் கூட்டிக் கொண்டே வெளியே வா! (வெளியே வா...) வீசும் காற்றை வாங்கிடலாம் விண்ணின் நிலவை ரசித்திடலாம் வீதி எங்கும் நடந்தே நாம் வியந்து மகிழ வெளியே வா! (வெளியே வா...)</p>
