தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நந்தா வா! - கோவி.பால.முருகு

3 Jan 2026, 2:20 pm
நந்தா வா! - கோவி.பால.முருகு
<p><strong>நந்தா வா!&nbsp;</strong></p> <p>ஒவ்வொரு மாதமும் மீனாட்சி தன் ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.சில மாதங்களில் தெருவில் இருக்கும் பெண்களும் அவளோடு சேர்ந்து கொள்வதுண்டு. அப்போது பேச்சு சுவராசியத்தில் நடந்து செல்வதில் சிரமம் இருக்காது.பல மாதங்கள் அவள் மட்டுமே நடந்து செல்ல நேரிடும். இருந்தாலும் செல்வதை விடுவதில்லை. இத்தோடு ஓராண்டை நிறைவு செய்யப் போகிறாள். பத்து வயது நிரம்பிய தன் மகன் நடராச னுக்கு உடல் நலம் சரியில்லாத போது வைத் &nbsp;தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமியிடம் மகனுக்கு உடல் நலம் சரியாகிவிட்டால் அடுத்து வரும் கார்த்திகைக்கு அவனை உன் &nbsp;சந்நிதானத்துக்கு அழைத்து வருகிறேன் என வேண்டிக் கொண்டாள். அதோடு மருத்து வரிடம் காட்டி மருந்து மாத்திரைகள் எடுத்தும், ஊசி போட்டும் நான்கு நாளில் உடல் நலம் &nbsp;சரியாகி விட்டது.நாளை கார்த்திகைத் திரு நாள்.மகனிடம் சொன்னாள் &ldquo;தம்பி&hellip;.உனக்கு உடம்பு சரியில்லாத போது வைத்தீஸ்வரன் கோயில் முருகன் கிட்ட வேண்டிகிட்டேன்.உடம்பு சரியாயிட்டுதுன்னா உன்னையும் அழைத்து வருவதாக..அதனால் நாளைக் காலையிலேயே வெய்யிலுக்கு முன் புறப்படு வோம்&rdquo; என்று சொன்னாள்.அம்மாவின் &nbsp;பேச்சைத் தட்டாத நடராசன் &ldquo;சரிம்மா&rdquo; என்று ஒத்துக் கொண்டான்.கடலங்குடியிலி ருந்து ஆறு மணிக்குப் புறப்பட்டவர்கள்.உத்திரங்குடி,கேசிங்கன் பாலம், இராதா நல்லூர் வழியாக மணல்மேட்டை அடைந்தார் கள்.&rdquo; அம்மா&hellip;..இன்னும் எவ்வளவு தூரம் &nbsp;நடக்கவேண்டும்?இப்போதே கால் வலிக்கிறது&rdquo;என்று சொல்லி சிணுங்கினான். &ldquo;தம்பி..அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.சாமி குத்தம் ஆயிடும்.மனசுல ஓம்&hellip;சரவணபவா!ஓம்&hellip;சரவணபவா என்று &nbsp;சொல்லிக்கொண்டே வா&hellip;கால் வலிக்காது&rdquo; என்று சொன்னதைக் கேட்டு வாயிலேயே சரவணபவா மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே வந்தான்.திருவாளபுத்தூரை நெருங்கும்போது &ldquo;அம்மா&hellip;.பசிக்குது&hellip;சாப் &nbsp;பாட்டை குடு&rdquo;என்றான்.மீனாட்சி காலைச் சிற்றுண்டியைக் கையிலே எடுத்து வந்தா லும். கோயிலுக்குச் சென்று அபிஷேகம் முடி யும்வரை கை கூப்பியபடியே நின்று, தீபா ராதனைக் காட்டிய பிறகுதான் சாப்பிடுவாள். இப்போது தன் மகன் அதுவும் பத்துவயது பாலகன் பசிக்கிறது என்று சொல்லும்போது அவளால் மறுக்க முடியவில்லை.இட்டலியை மிளகாப் பொடியில் எண்ணெய் ஊற்றி குழப்பி யதில் ஒவ்வொரு இட்டலியாக இரண்டு பக்க மும் நன்றாகப் புரட்டி எடுத்து வாழையிலை யில் வைத்து ஆறு ஆறு இட்டலியாக இரண்டு பொட்டலம் கட்டி வந்திருந்தாள்.&rdquo;சரி&hellip;இரு&hellip;. பள்ளிவாசல் வரட்டும் அங்கே போய் உக்காந்து சாப்பிடலாம்&rdquo; என்றாள். பள்ளிவாசல் உள்ளே அழகான மார்பில் &nbsp;பதித்த தூய்மையான இடத்தில் போய் அமர்ந்து கொண்டு பையைத் திறந்து ஒரு &nbsp;பொட்டலத்தை எடுத்து நடராசன் கையில் &nbsp;கொடுத்தாள்.&rdquo;அம்மா&hellip;நீ சாப்பிடலியா?&rdquo; என்றான்.&rdquo;தம்பி&hellip;நான் சாமிக்கு அபிஷேகம் முடிஞ்சி தீபாராதனைக் காட்டிய பிறகுதான் சாப்பிடுவேன்.நீ..சாப்பிடு&rdquo;என்று சொல்ல நடராசன் எண்ணெயும் மிளகாய்ப் பொடியும் இட்டலியில் ஊறி சாப்பிட மென்மையாகவும் சுவையாகவும் இருந்ததால் வேகமாகச் சாப்பிட்டு முடித்தான். மீண்டும் பயணம் தொடங்கியது சாப்பிட்ட தெம்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தான் நட ராசன்.இப்போது திருப்புன்கூரை அடைந்து &nbsp;விட்டார்கள்.சாலையின் வலது புறத்தில் &nbsp;பெரிய வளைவும், அழகான வேலைப்பாட மைந்த தூணும் இருந்ததைப் பார்த்த நட ராசன்&rdquo;அம்மா..இது என்ன ஆர்ச்?இதன் வழியே போனால் எங்கு போகலாம்?&rdquo;என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டான். &ldquo;ஓ&hellip;.இதுவா&hellip;இந்த ஊரில் இருக்கும் பிர பலமான சிவன் கோயிலின் ஆர்ச்..கொஞ்சம் உள்ளே போனால் கோயிலுக்குப் போகலாம்&hellip; நான் திரும்பி வரும்போது போகலாம் என்றி ருந்தேன் நீயே கேட்டுவிட்டாய் அதனால இப்போதே அந்தக் கோயிலுக்குப் போவோம்&rdquo; என்று ஆர்ச்சில் நுழைந்து கோயிலுக்குச் சென்றார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடனேயே நடராசன் கண்ணில் பட்டது முன்னே படுத்தி ருக்கும் நந்திதான்.வியப்போடு பார்த்தான். &rdquo;அம்மா&hellip;.எல்லா கோயிலிலேயும் நந்தி நேராப் படுத்திருக்கும்.இங்கே ஏன் கொஞ்சம் ஒதுங்கிப் படுத்திருக்கிறது?&rdquo;என்று கேட்டான்.பலமுறை வந்திருந்தும் இதைப்பற்றிய சிந்த னையே இல்லாத மீனாட்சிக்குத் தன் மகனின் கேள்வி வியப்பைத் தந்தது.&rdquo;ஆமாமில்ல&hellip;நான் எத்தனையோ முறை வந்திருக்கிறேன் இதுபற்றி சிந்தித்ததே இல்லை.நீ&hellip;அறி வாளிடாச் செல்லம்.இரு கோயில் குருக்களைக் கேட்டுச் சொல்கிறேன்&rdquo;என்று சொல்லிவிட்டு கோயில் குருக்களிடம் மகனை அழைத்துக் கொண்டு சென்றவள்&rdquo;சாமி..என் பையன் ஏம்மா நந்தி விலகியிருக்குன்னு கேக்குறான்.எனக்குத் தெரியல அதனால நீங்க கொஞ்சம் சொல்லுங்க சாமி&rdquo;என்று சொல்லிவிட்டுப் பணிவோடு கைகட்டிக் கொண்டு நின்றாள். குருக்கள் நந்தி விலகிப் படுத்திருக்கும் கதையைச் சொன்னார்.&rdquo; அம்பி..ஒரு காலத் தில சோழநாட்டில் ஆதனூர்ங்கிற ஊரில நந்தன் என்கிற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் ஒரு பண்ணையாரிடம் கூலி வேலை செய்திண்டிருந்தான்.அவனுக்குச் சிதம்பரம் நடராசரைக் கண்டு சேவிக்கணும்னு ஆசை.அவனும் பண்ணையாரிடம் சிதம்பரம் போய்வர விடுமுறை கேட்டான்.அவர் &ldquo;நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம்னு&rdquo; நாளைக் கடத்திட்டு வந்தாரே தவிர அனுப்பவில்லை.இப்படி இருக்கச்ச பக்கத்திலே இருக்கிற திருப்புன்கூருக்காவது சென்று சிவனைச் சேவித்து வரலாம்னு இந்த கோயிலுக்கு வந்தான்.&rdquo; &ldquo;ஓ&hellip;அப்படியா? அப்புறம் ?&rdquo;என்று ஆர்வத்தோடு கேட்டான் நடராசன்.தொடர்ந்த வர் சொன்னார் தாழ்த்தப் பட்டவா கோயி லுக்குள் வரக்கூடாதோன்னோ! வெளியிலி ருந்தே சிவனைப் பார்த்துச் சேவிச்சுட லாம்னு பார்த்தான்.அங்கிருந்து எம்பெரு மானைப் பார்க்க முடியல.&rdquo;ஏன்..பார்க்க &nbsp;முடியல?&rdquo;ஆர்வத்தில் கேட்டான். &rdquo;இருடாம்பி&hellip;.நான் முழுசாச் சொல்றத்த &nbsp;நன்னா கேட்டுக்க&rdquo;என்றவர்.நந்திதான் &nbsp;எம்பெருமானுக்கு நேராப் படுத்திண்டி ருக்கானே அதால பார்க்க முடியல அப்போ &nbsp;நந்தன் இருக்கானோல்லியோ அவன் சிவ பெருமானைப் பார்த்து&rdquo;ஈசனே உன்னைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்று ஆவலோடு &nbsp;வந்தேன்.ஆனால் உன்னைக் காண முடி யாதவாறு நந்தி தேவர் மறைக்கிறாரே!&rdquo;என்று கண்ணீர் விட்டு அழுதான்.&nbsp;&nbsp; &nbsp;நந்தனின் இந்தக் கவலையைக் கண்ட பெருமான் நந்தி தேவரைப் பார்த்து&rdquo;சற்றே விலகியிரும் பிள்ளாய்&rdquo;என்றார்.உடனே நந்தி எழுந்து விலகிப் படுத்துக் கொண்டது.நந்தனும் கண்குளிர சிவனை தரிசித்துச் சென்றானாம்.அப்போது விலகிப் படுத்த நந்தி அப்படியே இருந்துட்டது&rdquo;என்று நந்தனின் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். அதற்குப் பிறகு நடராசன் கேட்ட கேள்வி களில் குருக்கள் அசந்து போனார்&rdquo;சரிங்க&hellip;சாமி..ஆண்டவன் தான் எல்லா உயிர் &nbsp;களையும் படைக்கிறார் என்று சொல்றாங் களே&hellip;.நந்தனையும் அவர்தான படச்சி ருப்பாரு அவரே நந்தியை விலகிப் படுக்கச் &nbsp;சொல்லாமல் நேரடியாக &ldquo;நந்தா உள்ளே &nbsp;வா&hellip;நீயும் என்னால் படைக்கப் பட்டவன் தான்&rdquo;என்று சொல்லியிருக்கலாமே என்றான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத குருக்கள்.&rdquo;அபிஷ்ட்டு.. அதெல்லாம் பெரிய விஷயம்.நீ பொடியன் நோக்குப் புரியாது&rdquo; என்றார். &nbsp;&ldquo;இல்ல சாமி நீங்க சொல்லுங்க நான் புரிஞ்சிக்கிறேன்&rdquo; என்றான் நடராசன். குருக்கள் சொல்ல ஆரம்பித்தார்.&rdquo;பகவான் கிருஷ்ணன் நாலு வர்ணத்தப் படச்சி அவா ளுக்கு என்னன்ன வேலைன்னு விதிச்சி யிருக்கார். அதன்படிதான் நடக்கணும்.அது தான் நம்ம வருணாச்சிர தர்மம்.அதுதான் சனாதன தர்மம்&rdquo;என்றவர். பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நாலு &nbsp;வர்ணத்தைப் படைத்தார். அத்தோடு பஞ்ச மன் என்பவரையும் படைத்தார் அவா பாவ &nbsp;யோனியிலே பிறந்தவா. அதோட அவா அவாளுக்கு என்ன வேலைன்னும் விதிச்சி ருக்கார். எங்களைப் போன்றவாளுக்கு வேதம் ஓதுவது சொல்லித்தருவது மட்டும் தான் வேலை.மற்றவா எல்லாம் உழைத்து எங்களுக்குக் கொடுத்துப் பணிவிடை செய்ய ணும். அப்படிச் செய்யற வா மோட்சத்துக்குப் போவா.. என்று சொன்னவர், அதனாலதான் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற நந்தனை உள்ளே விடுவதற்குமுன் அக்கினியிலே இறக்கி புனிதமாக்கி தன்னோடு அழைத்துக் கொண்டார் பெருமான்&rdquo; என்றவர், மேலும் சொன்னார், &rdquo;நந்தன் கோயிலுக்குள் நுழைந்த &nbsp;தெற்கு கோபுர வாயில் தீட்டாயிடுத்தோன்னோ. அந்த வாயிலை நம்மவா தீட்சிதர்கள் மூடி னொட்டார். இப்போது நன்னா ஸ்ட்ராங்காமரக்கதவையும்போட்டுட்டா&rdquo;என்றவர்&ldquo;ஓம்நமச்சிவாய&rdquo;என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து அகன்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.