தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழர் நாகரிகத்தின் பெருமையை அறிய வாருங்கள்

21 Dec 2025, 3:21 pm
தமிழர் நாகரிகத்தின் பெருமையை அறிய வாருங்கள்
<p><strong>தமிழர் நாகரிகத்தின் பெருமையை அறிய வாருங்கள்&nbsp;பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு!&nbsp;</strong></p> <p>திருநெல்வேலி, டிச.21 - தமிழகத்தின் தொன்மை மற்றும் &nbsp;நாகரிகத்தின் சிறப்புகளை உலகறியச் &nbsp;செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களைப் பார்வையிட &nbsp;வருமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் ஆகியோருக்குத் தமிழக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 356 கோடி மதிப்பி லான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய அவர், ஒன்றிய அரசின் செயல்பாடு கள் குறித்து சில முக்கியக் கேள்வி களை எழுப்பினார். &nbsp;கடந்த 2021 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், அறிவிப்பு வெளி யாகி நீண்ட காலம் கடந்தும், அதற் கான பணிகள் இன்னும் தொடங்கப் படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். தமிழக அரசு மிகக்குறுகிய காலத் தில் உலகமே வியந்து பார்க்கும் வகை யில் பொருநை அருங்காட்சியகத்தை கட்டி முடித்துள்ளதை முதலமைச்சர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். இந்தியத் துணைக் கண்டத்தின் வர லாறு என்பது இனி தமிழ் மண்ணில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை ஆய்வுகள் உறுதிப் படுத்துவதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு தமிழரும் தங்களது &nbsp;குடும்பத்துடன் இந்த அருங்காட்சிய கங்களுக்குச் சென்று, நம் முன்னோர் களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தாமிரபரணி ஆற்றங்கரை &nbsp;நாகரிகம் மட்டுமன்றி, ஆன்மீக ரீதியாக வும் நெல்லைக்கு தமிழக அரசு &nbsp;செய்து வரும் பணிகளை முதல மைச்சர் பட்டியலிட்டார். 700 ஆண்டுகளுக்குப் பிறகு நெல் லையப்பர் கோவிலைப் புதுப்பித்த பெருமை முன்னாள் முதல்வர் கருணா நிதியையே சாரும் என்று கூறினார். &nbsp;கடந்த 1991 ஆம் ஆண்டு தீ விபத்தில் &nbsp;சேதமடைந்த நெல்லையப்பர் கோவில் &nbsp;தேருக்குப் பதிலாக, புதிய வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என அவர் உறுதி யளித்தார். தமிழகத்தின் தொன்மை நாகரி கம் எவ்வளவு பழமையானது மற்றும் சிறப்பானது என்பதைப் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனும் நேரில் வந்து பார்த்தால் மட்டுமே முழுமையாக உணர முடியும். எனவே, அவர்கள் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களுக்கு வர வேண்டும் என இந்த மேடையின் வாயிலாக அன்போடு அழைக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.