தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொலம்பியா ஜனாதிபதி தேர்தல்: முற்போக்கு - தீவிர வலதுசாரி அணிகளுக்கு இடையே இன்று இறுதிச் சுற்று போட்டி!

21 Jun 2026, 12:46 am
கொலம்பியா ஜனாதிபதி தேர்தல்: முற்போக்கு - தீவிர வலதுசாரி அணிகளுக்கு இடையே இன்று இறுதிச் சுற்று போட்டி!

கொலம்பியா ஜனாதிபதி தேர்தல்: முற்போக்கு - தீவிர வலதுசாரி அணிகளுக்கு இடையே இன்று இறுதிச் சுற்று போட்டி!

போகோட்டா, ஜூன் 20- கொலம்பியா நாட்டின் புதிய ஜனாதிபதி யைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்று தேர்தல் ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் முற்போக்கு வேட்பாளர் இவான் செபெடா மற்றும் தீவிர வலதுசாரி வேட்பாளர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா ஆகிய இருவருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சுமார் 4.1 கோடி மக்கள் இதில் வாக்களிக்க உள்ளனர். முன்னதாக நடைபெற்ற முதற்சுற்றுத் தேர்தலில், எஸ்ப்ரியெல்லா 43.74% வாக்கு களும், செபெடா 40.9% வாக்குகளும் பெற்றி ருந்தனர். முற்றிலும் மாறுபட்ட இரு துருவ அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை கள் மோதும் களமாக இத்தேர்தல் பார்க்கப் படுகிறது.

இரு வேறு துருவங்கள்

தற்போதைய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் சமூக சீர்திருத்தங்களைத் தொடரவும், நாட்டின் அமைதி மற்றும் பாலஸ்தீன ஆதரவு போன்ற சர்வதேச மனித உரிமை நிலைப்பாடுகளைப் பாதுகாக்கவும் முற்போக்கு வேட்பாளர் இவான் செபெடா வாக்குறுதி அளித்துள்ளார். மறுபுறம், நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் வலதுசாரி வேட்பாளர் எஸ்ப்ரியெல்லா, ஒடுக்கப்பட்ட மக்க ளின் உரிமைகளைப் பறிக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே உள்ளிட்ட தீவிர வலதுசாரி தலைவர்கள் ஆதர வளிக்கின்றனர்.

ஊழல் புகார்களும் கருத்துக்கணிப்புகளும்

வழக்கறிஞரான எஸ்ப்ரியெல்லா மீது துணை ராணுவப் படையினர் மற்றும் போ தைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதர வாகச் செயல்பட்டது, பெண் வெறுப்பு மற்றும் சமீபத்திய சுகாதார நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு தீவிர ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தேர்தல் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ‘குராமோ’ மற்றும் ‘சென்ட்ரோ நேஷனல்’ நிறுவனங்கள் எஸ்ப்ரியெல்லாவுக்கும், ‘செலாக் டேட்டா’ நிறுவனம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியா சத்தில் முற்போக்கு வேட்பாளர் செபெடாவி ற்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரி வித்துள்ளதால் தேர்தல் களம் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.