தீக்கதிர் உலக செய்திகள்
1 hour before

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கொலம்பியாவில் ஆகஸ்ட் 10 அன்று ஏற்பட்டசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,494 பேர் படுகாயமடைந்துள்ளனர். 496 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கொலம்பிய ஜனாதிபதி எஸ்ப்ரிலா தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரால் 53,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவிகளை வழங்குவதற்காக பொருளாதார அவசரநிலையை பிரகடனம் செய்யவுள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியிலேயே அரசின் முயற்சிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 29.87கோடி பேரல்களாகக் குறைந்துள்ளது என அந்நாட்டின் எரிசக்தி தகவல்நிர்வாகம் தெரிவித்துள்ளது. 1983 க்குப் பிறகு அந்நாட்டில் தற்போது தான் கச்சா எண்ணெய் இருப்பு இவ்வளவு அதிகமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச் மாத இறுதியில் இருந்து தொடர்ச்சியாக 20 வாரங்களாக இந்த இருப்புவாரம் தோறும் சரிவைச் சந்தித்து வருகிறது.இக்காலகட்டத்தில் மொத்தமாக 11.67 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. வரும்நாட்களில் மேலும் குறைந்து 24.34 கோடி பேரல்களாகச் சரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசியா மீதான தாக்குதல்களுக்கு உதவும் சவூதிபொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களை தீவிரமாக்கும் ஹவுதி

ரியாத்.ஆக.13-ஈரான், பாலஸ்தீனத்தின் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் போர் மேற்கு ஆசிய நாடுகள் முழுவதும்பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அப்போருக்கு மறைமுக கூட்டாளியாக இருந்து ஆதரவு வழங்கி வரும் சவூதி அரேபியாமீது ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக சவூதி அரேபியாவின் பொருளாதார மையங்கள், ஏமன் எல்லைப் பகுதிகள் மற்றும் செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பு நடத்திய தொடர்தாக்குதல்களால் சவூதி அரசுக்குக் கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.கடந்த ஆகஸ்ட் 5 அன்று, செங்கடலில் சவூதி நாட்டின் ‘யான்பு’ (Yanbu) துறைமுகத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த ‘என்சிசி வஃபா’ (NCC Wafaa) என்ற சவூதி எண்ணெய் டேங்கர் கப்பல் மீதுபாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல்யஹ்யா சாரீ அறிவித்தார்.

ஏமன் மீது சவூதி அரேபியா கடந்த 10 ஆண்டுகளாக விதித்துள்ள பொருளாதார தடைகளுக்குப் பதிலடியாக,ஜூலை 22 முதல் சவூதி அரேபியாவிற்கு எதிராகத் தாங்கள் விதித்துள்ள கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். சவூதி மீது முற்றுகை அறிவிக்கப்பட்ட 3 வாரங்களில் 8 சவூதி எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹவுதி ராணுவம்தாக்கியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக 29 சவூதி எண்ணெய் டேங்கர் கப்பல்கள் வழியிலேயே திரும்பிச் சென்றுள்ளன அல்லது வேறு பாதைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து யஹ்யா சாரீ கூறுகையில், “செங்கடலின் தெற்குப்பகுதியில் உள்ள ‘பாப் அல்-மந்தேப்’ ஜலசந்தியை நாங்கள் மூடியுள்ளதால், சவூதி தனது கப்பல்களை வடக்கு செங்கடல் வழியாக அனுப்பி வருகின்றது. சவூதியின் அனைத்துகடல்வழிப் பாதைகளையும் முடக்கும் வரை வடக்கு செங்கடலிலும் எங்கள் தாக்குதல் தொடரும். ‘தடைகளுக்கு பதிலடி தடை தான்’ என்பதே எங்கள் கொள்கை” எனவும் எச்சரித்துள்ளார்.ஏமனில் ஓரு பகுதி மட்டுமே ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டின் மத்திய பகுதி உள்ளிட்ட சிலப்பகுதிகள் அந்நாட்டின் சவூதி மற்றும் அமெரிக்க ஆதரவு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி மத்திய ஏமனில் உள்ள ‘மாரிப்’ பகுதியில் ‘சாஹ்ன் அல்-ஜின்’ என்ற ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இருந்த சவூதிபடைகள் மீது ஆகஸ்ட் 7 அன்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி ராணுவம் தாக்குதல்நடத்தியது. இதில் ஹவுதி ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ வாகனங்கள் கடும் சேதத்துக்குள்ளானது.

சவூதியின் பிரபல ‘அராம்கோ’ (Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதுஆகஸ்ட் 9 அன்று ஹவுதி டிரோன் தாக்குதல் நடத்தியது. மேலும் அன்று இரவே ஏமனின் ‘அல்-மோகா’ பகுதியில்இருந்த சவூதி ராணுவக் குழுக்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தி சவூதி ராணுவ வீரர்கள் உட்பட பலரை ஹவுதி ராணுவம் கொலை செய்தது.ஆகஸ்ட்11 மற்றும் 12 ஆகியஇரு நாட்களும் ஏமனின் மாரிப் மற்றும் தாயிஸ் மாகாணங்களில் உள்ள சவூதி ராணுவத்தின் கட்டளை மையங்கள் மீது தொடர் தாக்குதல்களைத் தொடுக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் கடல்வழி வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளதோடு, முக்கியவணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையும் மூடப்பட்டுள்ளதால், அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால், வரும் நாட்களில் சவூதிஅரேபியா - ஹவுதி அமைப்பினர் இடையிலான இந்தப் போர் இன்னும் மோசமான கட்டத்தை எட்டும் என அரசியல்மற்றும் போர் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.