போராட்ட நாட்களை பணி நாட்களாக முறைப்படுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
19 Feb 2026, 3:09 pm
<p><strong>போராட்ட நாட்களை பணி நாட்களாக முறைப்படுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, பிப். 19 - ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்ற இரண்டு வேலைநிறுத்த;g நாட்களை, பணி செய்த நாளாக முறைப்படுத்த வேண்டு மென்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் சோ. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை யில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக முதலமைச்சர் 3.1.2026 அன்று முன்னேற்றகரமான தமிழ்நாடு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறி வித்துள்ளார். இதற்காக பிப்ரவரி 8 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2025ஆம் ஆண்டில் ஜாக்டோ - ஜியோ பலகட்ட போராட்டங்களை நடத்தியது, ஜூலை 9, நவம்பர் 18 ஆகிய இரண்டு நாட்களில் வேலை நிறுத்தங்களையும் நடத்தியது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் 31 வரை ஜாக்டோ - ஜியோ நடத்திய 10 நாள் காலவரையற்ற போராட்ட காலத்தை முறைப்படுத்தியது போன்று, இந்த இரண்டு வேலைநிறுத்த நாட்களையும் முதலமைச்சர் முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
