தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மரணத்திலும் தொடரும் மனிதநேயம் கல்லூரி மாணவர் பிரதீப்குமாரின் கண்கள் தானம்

22 May 2026, 1:34 am
மரணத்திலும் தொடரும் மனிதநேயம்  கல்லூரி மாணவர் பிரதீப்குமாரின் கண்கள் தானம்
<p><strong>மரணத்திலும் தொடரும் மனிதநேயம் கல்லூரி மாணவர் பிரதீப்குமாரின் கண்கள் தானம்</strong></p><p>உளுந்தூர்பேட்டை,மே 21– கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிரா மத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் கண்தானம் செய்து மனிதநேயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர். கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த கூ.பொன்ராசு மங்கைவரம் தம்பதியின் இரண்டாவது மகன் பொன்.பிரதீப் குமார். இவர் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூ ரியில் பி.பி.ஏ.மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். (மே.19)செவ்வாய்க்கிழமை அன்று கூவாகத்தில் உள்ள தனது வீட்டில் எதிர்பாராத விதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பிரதீப்குமார் காலமானார். குடும்பத்தினரின் மனிதநேய முடிவு மகனை இழந்த பெரும் துயரத்திற்கு மத்தியிலும், பிரதீப் குமாரின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் பொன்.பிரவீன்குமார் ஆகியோர் முன்மாதிரியான முடிவை எடுத்தனர். மருத்து வர்களின் ஆலோசனைப் படி, மறைந்த பிரதீப் குமாரின் இரண்டு கண்களையும் தானமாக வழங்க முன்வந்தனர். மருத்துவமனை மூலம் கண்கள் தான மாக பெறப்பட்டு, கண்தான அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதன் மூலம் பார்வையிழந்து இருளில் வாடிய இரண்டு நபர்க ளுக்கு மீண்டும் பார்வை கிடைக்க உள்ளது. குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி “எங்கள் தம்பி பிரதீப் இனி இல்லை என்றாலும், அவனது கண்கள் மூலம் இன்னும் இரண்டு பேர் இந்த உலகத்தைப் பார்ப்பார்கள். அதுவே எங்களுக்கு ஆறுதல்” என அவரது குடும்பத்தி னர் கண்ணீர் மல்க தெரி வித்தனர். கண் தானம் செய்ததற்கான சான்றிதழை யும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இளம் வயதிலேயே உயிரிழந்த பொன்.பிரதீப் குமார், தான் மறைந்த பின்பும் தனது கண்கள் மூலம் இவ்வுலகை பார்க்க வழிவகை செய்துள்ளார். இந்த உன்னத செயல் சமூகத்திற்கு ஒரு முன்னு தாரணமாக அமைந்து ள்ளது. கண்தானம் குறித்த விழிப்புணர்வு அனை வரிடமும் சென்றடைய வேண்டும் என்பதே பிரதீப் குமாரின் குடும்பத்தினரின் விருப்பமாக உள்ளது. கண்தானம் செய்ய தொடர்புக்கு. தேசிய கண்தான இயக்கம், தொலைபேசி எண்: 104</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.