ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
30 Oct 2026, 12:48 am
<p><strong>ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!</strong></p><p>சேலம், அக்.29-அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு செயற்கை நுண்ணறிவுபாடப்பிரிவில் படித்து வந்த மாணவர் திவாகர், ரயில் மோதி உயிரிழந்தார்.</p><p>பெரம்பலூரை சேர்ந்த திவாகர், கல்லூரி விடுதியில் தங்கிப்படித்து வந்தார். இந்நிலையில், வியாழனன்று காலை 10.30 மணியளவில் சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் ரயில் சென்றபோது, ரயில் மோதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மாணவரின் உடலை அப்புறப்படுத்துவதற்கு சுமார் இரண்டு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன் உடலை துணியால் சுற்றி தண்டவாளப் பகுதியிலிருந்து சாலைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
