தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காதலித்து ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை

4 Mar 2026, 5:01 pm
காதலித்து ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை
<p><strong>காதலித்து ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை</strong></p> <p>சேலம், மார்ச் 4- பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏமாற்றியதால், தற்கொலைக்கு முயன்ற மாணவி சிகிச்சை பல னின்றி உயிரிழந்த நிலையில், மாண வியின் இறப்பிற்கு நீதிகேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற் றும் மாதர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிகா (பட்டியலினத்தவர்). இவர் நங்க வள்ளி பகுதியிலுள்ள தனியார் கல் லூரியில் மூன்றாமடாண்டு படித்து வந்தார். இவரை இளம்பிள்ளை பகுதியில் வசிக்கும் சாதி ஆதிக்க சமூகத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நான்கு ஆண்டு களை கடந்து இருவரும் காதலித்து &nbsp;வந்த நிலையில், கல்லூரி படிப்பை &nbsp;முடிந்தவுடன் திருமணம் செய்து &nbsp;கொள்ளுமாறு கோபிகா கேட்டுள் ளார். அதற்கு கார்த்திகேயன், &lsquo;நீ &nbsp;தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர் என்ப வதால் உன்னை திருமணம் செய்ய &nbsp;முடியாது&rsquo; என்று கூறியதாக தெரி கிறது. இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன் றார். இதுகுறித்து ஆட்டையாம் பட்டி காவல் துறையினர் முறை யாக விசாரணை மேற்கொள்ளா மல், மெத்தனப்போக்குடன் செயல் பட்டுள்ளதாக மாணவியின் பெற் றோர் குற்றஞ்சாட்டினர். மேலும், தங்களின் மகளுக்கு உரிய நீதி &nbsp;கேட்டு மாதர் சங்க நிர்வாகிகளு டன், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், அரசு மோகன் &nbsp;குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, &nbsp;சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று உயிரிழந்தார். இதனைய டுத்து மாணவியின் உறவினர்கள் &nbsp;உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, மாண வியை சித்தர் கோவில் மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கார்த்திகேயன் மற்றும் அவரது &nbsp;நண்பர்கள் சாதிய ரீதியாக மிரட்டிய தால், அவர் தற்கொலை செய்துள் ளார் என ஆதாரங்களுடன் காவல் &nbsp;துறையினரிடம் தெரிவித்த போதும், முறையான விசாரணை நடத்தவில்லை. மாணவியின் தற் கொலைக்கு காரணமாக இருந்த நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண் டும். மாணவியின் குடும்பத்தின ருக்கு அரசு உரிய நிவாரணம் மற் றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தினருக்கு உரிய &nbsp;பாதுகாப்பு வழங்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தினர். காவல் உதவி ஆணையாளர் கள் இருவர் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, &nbsp;அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், &nbsp;அருந்ததியர் மக்கள் அமைப்பினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரு கின்றனர். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், மாதர் சங்க &nbsp;மாவட்டப் பொருளாளர் பெருமா, &nbsp;வாலிபர் சங்க மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பெரியசாமி, மாண வர் சங்க மாவட்டத் தலைவர் டார் வின், அருந்ததியர் மக்கள் அமைப் பின் நிர்வாகிகள் இராவண பிரபு, &nbsp;வழக்கறிஞர் மாதேஷ் உள்ளிட் டோர் உடனிருந்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து மாணவியின் குடும்பத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் &nbsp;ஆறு லட்சம் ரூபாய் தற்போது முதல் &nbsp;கட்டமாக நிதி வழங்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.