தனியார் பள்ளி வாகனங்களில் ஆட்சியர்கள் சோதனை
16 May 2026, 1:13 am

தனியார் பள்ளி வாகனங்களில் ஆட்சியர்கள் சோதனை

ஈரோடு, மே 15- தனியார் பள்ளி வாகனங்களுக் கான வருடாந்திர கூட்டாய்வு பணி யினை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பவளத்தான் பாளையம், ஏஈடி பள்ளி வளாகத் தில், வட்டார போக்குவரத்து துறை யின் சார்பில் தனியார் பள்ளி வாக னங்களுக்கான வருடாந்திர கூட் டாய்வு பணி வெள்ளியன்று துவங்கி யது.

இதனை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந் துறை, பவானி, கோபிசெட்டிபா ளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 1,096 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதில் அரசின் விதி முறைகளின்படி, தனியார் பள்ளி களில் செயல்படக்கூடிய வாக னங்கள் இயக்கப்படுகிறதா? என் றும், வாகனங்களின் ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மே 19 ஆம் தேதியன்று கோபி பகுதிகளிலுள்ள 60 பள்ளி களை சேர்ந்த 463 வாகனங்களுக் கும், மே 20 ஆம் தேதியன்று பவானி பகுதிகளிலுள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 358 வாகனங்களுக்கும் வரு டாந்திர கூட்டாய்வு நடைபெறவுள் ளது.

இந்நிகழ்வில், வருவாய் கோட் டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான் விழி, வட்டார போக்குவரத்து அலு வலர்கள் நடராஜன், பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனசேகர், முத்துசாமி, நித்யா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் ஆயு தப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வரு டாந்திர ஆய்வு வியாழனன்று நடை பெற்றது.

நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 55 தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த 757 பள்ளி வாகனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன.

இந்த ஆய்வில் நாமக் கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டு, ஒவ்வொரு வாக னங்களாக நேரில் ஆய்வு மேற் கொண்டார்.