தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

13 Mar 2026, 4:52 pm
எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்போர் மீது  கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
<p><strong>எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்போர் மீது &nbsp;கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை</strong></p> <p>புதுக்கோட்டை, மார்ச் 13- &nbsp;எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள், சமையல் எரிவாயு முகவர்கள், எரிவாயு பயன்படுத்தும் அரசு, தனியார் கல்லூரி விடுதிகள், கேண்டீன் உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது. &nbsp;பின்னர் ஆட்சியர் கூறுகையில், &ldquo;புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடையே பரவி வரும் தகவல்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு எவ்வித அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விநியோகம் செய்யப்படும். தேவைக்கு அதிகமாக சிலிண்டர்கள் பதிவு செய்வதையோ, தேவையற்ற முறையில் சேமித்து வைப்பதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எரிபொருள்கள் மற்றும் எரிவாயு உருளைகளை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்&rsquo;&rsquo; என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஹெ.மை. குழந்தைச்சாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஏ. ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.