அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
2 Jun 2026, 8:52 pm

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில், ஜுன் 2- கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சரகத்திற்குட்பட்ட, கண் ணாட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளி மற்றும் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெறும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், ஜுன் 2 செவ் வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் மாணவ மாணவி யர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளும் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது.

அந்த வகை யில் ஆசிரியர்களாகிய நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் உங்கள் ஆசிரி யர் பணியை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவி யர், அவர்கள் எளிதில் புரியும் வகையில் அடிப்படைக் கல்வியி னை வழங்க முன்வர வேண்டும்.

இந்த அடிப்படை கல்விதான் மாணவ மாணவியர்களின் மேற் படிப்புக்கு மிகவும் உந்துதலாக இருக்கும்.

மேலும் மாணவர்கள் இயற்கை யான சூழலில் கல்வி கற்கும் வகையில் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புற சூழல், கழிப்பறைகள், குடிநீர் வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவை களை ஏற்படுத்திட வேண்டும்.

ஆசி ரியர்களாகிய நீங்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மருத்துவம் உள்ளிட்ட மேல்படிப்புகளுக்கான முன்னுரிமை, அரசு வேலைகளில் முன்னுரிமைகள் குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்க ளின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

ஒவ்வொரு மாண வர்களிடையே உள்ள தனித்திறமை களை கண்டறிந்து, அத்திறமை களை வெளிக்கொணர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய பாடத்திட்ட த்திற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எந்த வகையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண் டும் என நன்கு புரிந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக சீர்மிகு பலகையினை (Smart Class) நன்கு பயன்படுத்திட கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மாணவர்கள் எளிதாக, ஆர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாண வர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்திட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவ லர்கள், வட்டார கல்வி அலுவ லர்கள், அனைத்து தலைமையா சிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட் டோர் முழு அர்ப்பணிப்புடன் பணி யாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார்.

நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர் ஜெயசிங், தலைமை ஆசிரியர்கள் ஜோஸ் பிரகாஷ் (கண்ணாட்டுவிளை அரசு தொ டக்கப்பள்ளி) திருமதி.தமிழ்ச் செல்வி (இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி) ஆசிரியை திருமதி.சாரதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்