முந்தய பக்கம்

எஸ்ஐஆர் விண்ணப்பங்களை அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

17 Nov 2025, 4:40 pm
எஸ்ஐஆர்  விண்ணப்பங்களை  அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்
<p><strong>எஸ்ஐஆர் &nbsp;விண்ணப்பங்களை&nbsp; அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்</strong></p> <p>திருவள்ளூர், நவ.17- &nbsp;திருவள்ளூர் &nbsp;மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. &nbsp;இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 1.கும்மிடிப் பூண்டி, 2.பொன்னேரி, 3.திருத்தணி, 4.திரு வள்ளூர், 5.பூந்தமல்லி, 6.ஆவடி, 7.மதுர வாயல், 8.அம்பத்தூர், 9.மாதவரம் மற்றும் 10.திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் நவ. 18, &nbsp;19 மற்றும் 20 (செவ்வாய், புதன்,வியாழன்) ஆகிய நாட்களில் மாலை 3. மணி முதல் 6. மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்புதல் தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், மேற்படி உதவி மையங்களை பயன்படுத்தி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறும், மேலும், மேற்படி மையங்கிலேயே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram