விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களை பாராட்டிய ஆட்சியர்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களை பாராட்டிய ஆட்சியர்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, பிப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்களை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து பரிசுகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விபத்துகள் இன்றி பாதுகாப்பாக இயக்கிய 10 அரசு பேருந்து ஓட்டுநர்களை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பாதுகாப்பாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் வகையில் ஓட்டுநர்கள் அரசு பேருந்துகளை தொடர்ந்து பாதுகாப்பாக இயக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி துணை மேலாளர்கள் சிவராமன் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்), கண்காணிப்பாளர் சிவசக்தி, ஓட்டுநர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
