“நான் வாசித்த புத்தகம்’’ கட்டுரைப் போட்டி ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு
15 Dec 2025, 5:05 pm
<p><strong>“நான் வாசித்த புத்தகம்’’ கட்டுரைப் போட்டி ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.15- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில், கடந்த நவம்பர் மாதம் வாசிப்பு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “நான் வாசித்த புத்தகம்’’ என்ற தலைப்பில் புத்தக மதிப்புரை - கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், ஒன்றியம் வாரியாக வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ, இரண்டாவது இடம் பெற்ற நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாணவியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவியை, பள்ளி தாளாளர் சலாஹுதீன், பள்ளி செயலாளர் முஹம்மது சாதிக், ஆக்கூர் நிர்வாக சபை தலைவர் முஹம்மது சித்திக், தலைமையாசிரியர் ஷாஜஹான் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.</p>
