பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஜெ. இ.பத்மஜா ஆய்வு
11 Jun 2026, 11:39 pm
<p><strong>பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஜெ. இ.பத்மஜா ஆய்வு </strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூன்.11- கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் பேருந்து நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். கட்டண கழிப்பறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். பேருந்து நிலையம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் புகார் எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தினை துாய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.</p>
