தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 130 பேர் கைது

11 Nov 2025, 3:41 pm
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 130 பேர் கைது
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 130 பேர் கைது</strong></p> <p>திருப்பூர், நவ.11- மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகை வழங் கக்கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் &nbsp;பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 130 பேர் கைது செய்யப் பட்டனர். மாவட்டத் தலைவர் ஏ.லோகநாதன் தலைமையில் நடை பெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில், மாற்றுத்திறனாளிக ளுக்கான உதவித்தொகையை மற்ற மாநிலங்களில் இருப்பது &nbsp;போல ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம், கடும் ஊனமுற்றோ ருக்கு ரூ.10 ஆயிரம், &nbsp;கடும்ஊனமுற்று படுக்கையில் வாழும் &nbsp;மாற்றுத் திறனாளிக்கு ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க &nbsp;வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பா.ராஜேஷ், மாவட்டச் செயலாளர் ஆர். பழனிச்சாமி, &nbsp;மாவட்டப் பொருளாளர் பி.ரோசி, மாவட்ட துணை தலைவர்கள் டி.ஜெயபால், எஸ்.குருசாமி, &nbsp;துணைச் &nbsp;செயலாளர்கள் சுரேஷ், பாலசுப்பிரமணி, அழகிரி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், சையத் அலி &nbsp;பாத்திமா, சசிகுமார், சந்திரகலா உள்ளிட்ட 55 பெண்கள் உள்பட 160 பேர் கலந்து கொண்டு 130 பேர் கைதாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.