சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
18 Feb 2026, 3:04 pm
<p><strong>சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு</strong></p>
<p>தூத்துக்குடி, பிப்.18- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சாத்தான்குளம் வட்டம்,முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடை பெற்ற கால்நடை வளர்ப்போருக்கான பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் க.இளம் பகவத், புதனன்று (பிப்.18) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்தி னை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கட்டி டங்களை பார்வையிட்டார். பின்னர் பெரியதாழை ஊராட்சியில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளத்தினை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சி யர் பார்வையிட்டார். ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரி கள் உடன் சென்றனர்.</p>
