பாளை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
23 Mar 2026, 3:39 pm
<p><strong>பாளை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு</strong></p>
<p>திருநெல்வேலி, மார்ச் 23- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23- ம் தேதி நடை பெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட் டத்தில் ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் முன்னேற் பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மற்றும் பாளையங் கோட்டை சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அம்பாசமுத்திரம், ‘நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி களின் பொது பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஷ்தவா ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளையும் எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை பார்வை யிட்டனர். அப்போது வாக்கு எண்ணிக் கை மையத்தில் செய்யப்பட்டுளள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் களுக்கு ஆட்சியர் சுகுமார் விளக்கினார். அப்போது. மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் தேஷ்முக், மாவட்ட போலீஸ் எஸ் பி பிரசன்ன குமார், மாவட்ட வருவாய் அலுவலர் துரை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் அடங்கிய நெல்லை, அம்பா சமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய் யப்பட்ட எந்திரங்கள் ஒவ்வொரு தொகுதி வாரியாக பாது காப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாது காப்புடன் வைக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண் ணிக்கைக்கான முன்னேற் பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்போன்றவை குறித்து இந்த ஆய்வின் போது விவாதிக்கப்பட்டது.</p>
