பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆட்சியர் ஆய்வு
3 Jan 2026, 4:57 pm
<p><strong>பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆட்சியர் ஆய்வு</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.3- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், திருவளர்க்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பணி தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை ஒவ்வொரு வாரமும் தெரியப்படுத்த வேண்டும் என ஆவின் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு உபரி பாலில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் பால் பவுடர், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடர், டெய்ரி ஒயிட்னர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் தமிழகத்தில் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அமைய உள்ள இந்த ஆலையின் மூலமாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், பெரம்பலூர் பால்வளம் துணைப் பதிவாளர் ஜெயா, கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் பிரேம், பால்வளத்துறை உதவி மேலாளர் மரு.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
