தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்திய ஆட்சியர்

20 Mar 2026, 2:55 pm
மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்திய ஆட்சியர்
<p><strong>மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்திய ஆட்சியர்</strong></p> <p>விருதுநகர், மார்ச் 20- &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;அதிகமுறை ஜனநாயக கடமை யாற்றிய மூத்த வாக்காளர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா கௌர வப்படுத்தினார். விருதுநகரில் உள்ள தனியார் முதி யோர் இல்லத்தில் &nbsp;100 சதவீதம் வாக்குப்பதி வை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட மாவட்ட &nbsp;ஆட்சியர் &nbsp;&rdquo;என் வாக்கு, என் குரல்&rdquo; &rdquo;என் வாக்கு, என் உரிமை&rdquo; என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை மூத்த வாக்கா ளர்களுக்கு அணிவித்து கௌரவப் படுத்தினார். அப்போது ஆட்சியர் கூறுகையில், சட்டமன்றத் தேர்தல் &nbsp;நடைபெறவுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்கா ளர்கள், திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களர்களும் 100 சதவிகி தம் வாக்களிக்க வேண்டும். &nbsp;வாக்களிப்ப தின் அவசியம் குறித்து ஏற்கனவே விழிப்பு ணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடி மக்களை &nbsp;கௌரவப்படுத்தி உள்ளோம். &nbsp;வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடி மக்களுக்கு &nbsp;வசதிகள் செய்து தரப்பட்டுள் ளன. எனவே,ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 80 வயதிற்கு மேற்பட்ட 7,805 மூத்த வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவ லர் திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலு வலர், மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.