ரத்த தான கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு
5 Oct 2026, 9:23 pm

ரத்த தான கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு

நாகர்கோவில், அக்.5 -தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு,அதிகமுறை ரத்த தான முகாம்களை நடத்திய அமைப்புகள் மற்றும் அதிகமுறை ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்குபாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில்நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இரத்ததான முகாம் அமைப்பாளர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினார். கடந்த ஆண்டு அதிக அளவில் இரத்த தானமுகாம்களை நடத்திய பொதுநிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்லூரிகள் உள்ளிட்ட 56 அமைப்புகள்பாராட்டப்பட்டன.

மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ டேவிட், துணைமுதல்வர் கீதா ராணி, மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசிங், அலுவலர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும்இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.