தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்: ஆட்சியர் வாழ்த்து

1 Feb 2026, 3:51 pm
அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில்  முதலிடம் பிடித்த மாணவர்: ஆட்சியர் வாழ்த்து
<p><strong>அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் &nbsp;முதலிடம் பிடித்த மாணவர்: ஆட்சியர் வாழ்த்து</strong></p> <p>புதுக்கோட்டை, பிப்.1 - &nbsp;தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறி வியல் கண்காட்சியில், மாநில அளவில் முத லிடம் பிடித்த தூய மரியன்னை மேல்நிலைப் &nbsp;பள்ளியைச் சேர்ந்த என்.பர்ஹான் என்ற &nbsp;மாணவரை நேரில் அழைத்து புதுக்கோட்டை &nbsp;மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெள்ளிக் கிழமை பாராட்டினார். தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறை யில் பயிலும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்படுகிறது. அதில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி &nbsp;மாவட்ட அளவில் கண்காட்சி நடைபெறும். அதன்படி அறந்தாங்கி மற்றும் புதுக் கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடம் &nbsp;பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான கண்காட்சி கோயம்புத்தூரில் நடைபெற்றது. &nbsp;மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஒரு மாணவர், ஒரு ஆசிரி யர் தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் &nbsp;இருந்து ஒரு காட்சி தலைப்பு மட்டும் தேர்வு &nbsp;செய்யப்பட்டு, தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி தெலுங்கானா மாநி லம், ஹைதராபாத்தில் ஜன.19 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. &nbsp;இதில் புதுக்கோட்டை தூய மரியன்னை &nbsp;மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாண வர் என்.பர்ஹான் மாநில அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் என்.பர்ஹானை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் அழைத்துப் பாராட்டினார். &nbsp;இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலு வலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலு வலர்கள் முனைவர் ஜெ.ஆரோக்கியராஜ் (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.