கூட்டு உழைப்பு - மு.வாடிப்பட்டி மா.முத்துசாமி
9 Nov 2025, 2:42 pm
<p><strong>கூட்டு உழைப்பு</strong></p>
<p>வாண்டுகளே! வாண்டுகளே!! வண்டுகளின் சாகசச் செயல் ஜோரான ஜோடி வண்டு ஜோடியாய் செய்யும் செயல் சாணி உருண்டை நடுவிலே வண்டுகளோ முன்னும் பின்னும் சாதனையைப் பாருங்களேன் சற்று நின்று கவனியுங்களேன் முன்வண்டின் பின் கால்கள் உருண்டையின் மேல் இருக்க முன் கால்கள் தரையில் ஊன்றி முன்னோக்கி இழுப்பதையும் பின்வண்டின் பின் கால்கள் உருண்டையின் மேல் அழுத்தி முன் கால்கள் தரையில் ஊன்றி உருண்டையை உந்தித் தள்ள வண்டுகள் இரண்டும் முழுமூச்சாக எதிரெதிர் திசையில் ஒன்றை ஒன்று பார்க்காமல் தொடர் செயலால் முன்னேறுதே. முன்வண்டு இழுக்க பின்வண்டு தள்ள -தொடர்ச்சியாக பள்ளம் மேடு பாராமல் தன் இலக்கை அடையும் வண்டுகளை பூச்சிகள் வண்டுகள் தானே இவைகள் கற்றுக்கொள்ள இருப்பதென்ன -என்று இறுமாப்புக் கொள்ளாமல் கூட்டு உழைப்பு நாட்டுக்கு தேவை மனதில் நிறுத்துவோம் வாண்டுகளே வாண்டுகளே....</p>
<p> </p>
