திண்டிவனத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு
5 Jul 2026, 1:49 am
<p><strong>திண்டிவனத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை முன்னின்று நடத்தினர். இவர்களுடன் திண்டிவனம் வட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன், நகர செயலாளர் ஆர்.பி.குமரேசன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்களான டி.ராமதாஸ், டி.ராஜாராம், எஸ்.பார்த்திபன் ஆகியோர் வீடு வீடாகச் சென்றும், பொதுமக்களைச் சந்தித்தும் சந்தாக்களைத் திரட்டினர்.</p>
