முந்தய பக்கம்

இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடுக!

15 Jun 2026, 11:53 pm
இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடுக!
<p><strong>இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடுக!</strong></p><p>கோவை, ஜூன் 15- இளைஞர்களின் வேலை வாய்ப்பை முதல்வர் விஜய் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்க ளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். தற் போது தமிழகத்தில் மின்துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள் ளன. அதற்குக் காரணம் போதிய ஊழியர்கள் இல்லாதது தான். எனவே தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் நடத்திய தேர் வின் மூலம் தேர்ச்சி பெற்ற 9,600 கல ஆய்வு பணியாளர்களுக்கு வேலையை நியமிக்க வேண்டும். மின்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 20,000 காலிப் பணியிடங் கள் உள்ளது. கோவையில் மட்டும் சுமார் 10,000 காலிப்பணியிடம் உள் ளது. அதேபோல் பெண்களுக் கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை யும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவெல், டி. என்.இ.பி ஒருங்கிணைப்பாளர் முரு கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், தற்போதுள்ள அரசுக்கு இளைஞர் கள்தான் அதிகமாக வாக்களித்துள் ளனர். இதை முதல்வரும் தெரிவித் துள்ளார். எனவே இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இல்லை யெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram