தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள்!

3 hours before
தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள்!
<p><strong>தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள்!</strong></p><p>கோவை, அக்.4-குப்பையாக வீசப்படும் தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி, பல்வேறு பயனுள்ள கைவினைப் பொருட்களை உருவாக்கி சுயதொழிலில் ஈடுபட்டு வரும் கோவையை சேர்ந்த இளைஞர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் தேங்காய் ஓட்டில் செதுக்கி அசத்தியுள்ளார்.கோவை மாவட்டம், குனியமுத்தூர், இடையார்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித். டிப்ளமோ படிப்பை முடித்த இவர், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். சிறு வயது முதலே ஓவியம் மற்றும் பல்வேறு படைப்பாற்றல் சார்ந்த கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த சுஜித், கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது கலைத்திறனை புதிய முயற்சியாக மாற்றியுள்ளார். அப்போது குப்பையாக வீசப்படும் தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி, பேனா தாங்கி, சாவிக்கொத்து, கிண்ணங்கள், பூந்தொட்டி, கரண்டி, கடவுள் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கி வருகிறார். அன்றாட பயன்பாட்டில் உள்ளநெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும் வகையில் தனது படைப்புகளை உருவாக்கி வருவதாக சுஜித் தெரிவித்துள்ளார்.</p><p>தேங்காய் ஓட்டை கைவினைப் பொருளாக மாற்றுவதற்கு அதிக பொறுமையும் கவனமும் தேவைப்படுவதாக கூறும் அவர், தேங்காய் ஓட்டின் வடிவம், தடிமன் மற்றும் தண்மைக்கு ஏற்ப ஓடுகளை முதலில் தேர்வு செய்கிறார். பின்னர் தேவையான வடிவில் வெட்டி, செதுக்கி, மெருகூட்டிகலைப்பொருட்களை உருவாக்குகிறார். சிறிய தவறு ஏற்பட்டாலும் தேங்காய் ஓடு உடைந்து விடக்கூடும் என்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் ஆங்கிலத்தில் தேங்காய் ஓட்டில் செதுக்கி புதிய படைப்பை உருவாக்கியுள்ளார். முழுவதும் தேங்காய் ஓட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படைப்புக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுஜித் தெரிவித்துள்ளார். குப்பையாக கருதப்படும் பொருட்களுக்கும் புதிய பயன்பாட்டை உருவாக்க முடியும் என்பதையும், இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.