தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் அதிர்ச்சி: ஆடைகளற்ற நிலையில் இளம் பெண் உடல் கண்டெடுப்பு!

7 hours before
கோவையில் அதிர்ச்சி:  ஆடைகளற்ற நிலையில் இளம் பெண் உடல் கண்டெடுப்பு!

கோவை மேற்குப் புறவழிச்சாலை மஞ்சப்பள்ளம் காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேற்குப் புறவழிச்சாலை சுகுணாபுரம் அடுத்த மஞ்சப்பள்ளம் காட்டுப் பகுதியில் ஆடைகளின்றி பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்த தடயவியல் துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதி முழுவதும் போலீஸார் சோதனையிட்டனர்.

பாலக்காடு சாலை மற்றும் மேற்குப் புறவழிச்சாலை சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரிக்கும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணாக இருக்கலாம் என்றும் அவர் உயிரிழந்து சுமார் 3 முதல் 4 நாட்கள் இருக்கலாம் என்பதும் தெரியவந்ததுள்ளது.

முகம் சிதைந்த நிலையில் இருப்பதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவான பெண் மாயமான புகார்கள் தொடர்பான தகவல்களையும் போலீஸார் திரட்டி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.