தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘டிஜிட்டல் கைது’ என பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: 18 நாட்கள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

1 Jun 2026, 11:36 pm
‘டிஜிட்டல் கைது’ என பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: 18 நாட்கள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

‘டிஜிட்டல் கைது’ என பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: 18 நாட்கள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

கோவை, ஜூன் 1- கோவையில் போலி டிஜிட்டல் கைது மிரட்டலுக்கு பயந்து, 58 வயது பெண் ஒருவர் தனது கணவரின் ஓய்வூதிய பலன் தொகையான ரூ.18 லட்சத்தை பறிகொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள் ளது.

மேலும், மிரட்டலுக்கு அஞ்சி அவர் 18 நாட்கள் வெளியுலகத் தொடர்பின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த சோகமும் நடந்துள் ளது. கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியை சேர்ந்த 58 வயது பெண் மணி.

இவருடைய கணவர் முன் னாள் வங்கி அதிகாரி. அவர் கொரோனா பேரிடர் காலத்தின் போது உயிரிழந்தார். அதன் பின் னர், அப்பெண் சென்னையில் உள்ள தனது மகளுடன் வசித்து வந்தார்

. கடந்த ஏப்ரல் மாதத்தில், அவரும் அவரது மகளும் கோவை வட வள்ளியில் உள்ள தங்களது சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு மகள் சென்னைக்குத் திரும்பிய நிலையில், அந்த பெண் மட்டும் வடவள்ளி வீட் டில் தனியாக தங்கியிருந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, அந்த பெண்ணின் மொபைல் எண் ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் மும்பை காவல்துறை அதிகாரி என்று அறி முகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், உங்கள் வங்கிக் கணக்கிலி ருந்து பயங்கரவாத அமைப்புக ளுக்கு ரூ.2.5 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாகப் பணம் பரிமாற் றம் செய்யப்பட்டுள்ளது

. எனவே, நீங் கள் “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்யப் பட்டுள்ளீர்கள் என்று மிரட்டியுள் ளார். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டின் வெளியே ரகசிய போலீசார் கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது யாரிடமாவது கூறினாலோ உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என் றும் பயமுறுத்தியுள்ளார்.

இந்த மிரட்டலால் கடும் அதிர்ச்சி யடைந்த அந்த பெண், பயத்தின் கார ணமாக கடந்த 18 நாட்களாக வீட்டை விட்டு வெளியேயும் வரவில்லை, யாருடனும் எந்த தொடர்பும் கொள் ளாமல் மன ரீதியாகப் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். 18 நாட்க ளுக்குப் பிறகு, அந்த பெண்ணைத் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி யுள்ளது. அதற்கு அந்த பெண், தன்னிடம் சேமிப்பாக ரூ.18 லட்சம் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உடனே அந்த நபர், அரசு தணிக் கைக்காக அந்த பணத்தை முழுமை யாக நாங்கள் குறிப்பிடும் கணக் கிற்கு மாற்ற வேண்டும்; தணிக்கை முடிந்த சில நாட்களில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று நம்பும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண், இரு தவணைகளாக மொத்தம் ரூ.18 லட் சத்தை மோசடி கும்பல் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள் ளார்.

ஆனால், பணம் அனுப்பப்பட்டு ஒரு வாரம் கடந்தும், கூறியபடி பணம் திரும்ப வரவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார். மோசடி செய் யப்பட்ட அந்த ரூ.18 லட்சம், உயிரி ழந்த அவரது கணவரின் ஓய்வூ தியப் பலன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித் தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களை வைத்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.