ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் பாதிப்பு!
28 Jun 2026, 2:08 am
<p><strong>ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் பாதிப்பு! </strong></p><p>கோவை, ஜூன் 27- கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவ டைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் தற்காலிகமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, தோண்டப்பட்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந் ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய முறையில் தார் மற்றும் ஜல்லிக்கற்களை கொண்டு மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக அப்படியே போட்டுச் சென்று உள்ளனர். இந்நிலையில், அந்த சாலை வழியாக அதிக எடை யுடன் வந்த கனரக லாரி ஒன்று, அதை கடக்க முயன்ற போது, மண்ணுக்குள் சக்கரம் இறங்கி சிக்கியது. லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி, வண்டி ஒருபுறமாக சாய்ந்தது. பின்னர் இயந்திரங்கள் மூலம் லாரியை குழிக்குள் இருந்து மீட்டனர். பருவமழை காலம் நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த எதார்த்த நிலையை உணர்ந்து, பாதாள சாக்கடைப் பள்ளங் களை சீராக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>
