தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஷிப்ட் முறைகளில் தன்னிச்சையான மாற்றம்

4 Jun 2026, 10:37 pm
ஷிப்ட் முறைகளில் தன்னிச்சையான மாற்றம்

கோவை, ஜூன் 4-

கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், தன்னிச்சையாக பேருந்துகளை இயக்க ஷிப்ட் முறைகளில் மாற்றங்களை புகுத்தியுள்ளதை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோவை மண்டலத்தில் செயல்படும் சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தொமுச,

எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், கோவை மண்டலத்தில் இயக்கப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிர்வாகம் தன்னிச்சையாக 1 ஷிப்ட் மற்றும் 1 ½ ஷிப்ட் எனப் பல

மாற்றங்களை செய்துள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, முதல் ஷிப்ட் காலையிலிருந்து மதியம் வரையும், இரண்டாவது ஷிப்ட் மதியத்திலிருந்து இரவு வரையும் இயங்கி வருகிறது.

ஆனால், புதிய மாற்றத்தின் மூலம் காலையில் ‘செட் அவுட்’ செய்து, மாலை வரை தொடர்ந்து பணி செய்யும் 1 ½ ஷிப்ட் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நகரப் பேருந்துகளில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வரும் சூழலில், இந்த புதிய நடைமுறை அவர்களை பெரிதும் பாதிக்கும். எனவே, சுமார் 165 வண்டிகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 1 ½ ஷிப்ட் முறையை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், கோவை மண்டலத்தில் இயங்கும் அனைத்து கிளைகளிலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான பணி ஒதுக்கீட்டை சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். புறநகர் மற்றும் தொலைதூர பேருந்துகளில் பணி

புரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தொடர்ந்து பகல் மற்றும் இரவு முழுவதும் முழுமையாக பணி

செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமற்றது.

இத்தகைய தொடர் பணிகளால் தொழிலாளர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், தொழிலாளர்களின் நலன் கருதி தொலைதூர பேருந்துகளில் தொடர்ந்து பணிபுரியும் இந்த நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.