முந்தய பக்கம்

விதிமீறிய 332 வாகனங்களுக்கு அபராதம்

27 Jun 2026, 1:00 am
விதிமீறிய 332 வாகனங்களுக்கு அபராதம்
<p><strong>விதிமீறிய 332 வாகனங்களுக்கு அபராதம்</strong></p><p>கோவை, ஜூன் 26- கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், 332 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், 332 மாற்றியமைக்கப்பட்ட சைலன் ஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில், அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் கண்டறியப் பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட 332 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த 332 சைலன்ஸர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சைலன்ஸர்கள் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை பார்வையிட்ட கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையை பாராட்டியதுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் வாகனங்களை இயக்குவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram