கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 Jun 2026, 9:55 pm

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், ஜூன் 2– பராமரிப்புப் பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு - சேலம் ரயில் வழித்தடத்தில், மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டு முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறி வித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 (இன்று) மற்றும் ஜூன் 6 ஆகிய தேதிகளில் கேரளம் மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், டாடாநகர் செல்லும் எர்ணா குளம் - டாடாநகர் விரைவு ரயில் (வண்டி எண்: 18190) வழி யில் வசதியான ஒரு இடத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும். இதேபோல, ஜூன் 3 (இன்று) மற்றும் ஜூன் 6 ஆகிய தேதிகளில் கேரளம் மாநிலம், ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் செல்லும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (வண்டி எண்: 13352) வழியில் வசதியான ஒரு இடத்தில் சுமார் 20 நிமி டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

வாலிபர் சங்க மாநகர நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், ஜூன் 2- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகர நிர்வாகிகள் ஞாயிறன்று நடைபெற்ற சிறப்புப் பேரவை யில் தேர்வு செய்யப்பட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று, உரையாற்றினர். இதில், சங்கத் தின் வடக்கு மாநகரத் தலைவராக சுபாஷ், செயலாளராக நவீன் குமார், பொருளாளராக ரமேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பராமரிப்பில்லாத நீர்த்தேக்கத்தொட்டி: தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

திருப்பூர், ஜூன் 2- திருப்பூரில் தனியார் ஓட்டலில் பராமரிப்பின்றி இருந்த நீர்த்தேக்கத்தொட்டியில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயி ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் - காங்கேயம் சாலையில் தனியார் நட்சத்திர ஓட்டல் செயல்பாடின்றி மூடப்பட்டுள்ளது. அதன் பின் புறத்தில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் விளை யாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டல் வளாகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீச்சல் குளம் அருகே அவர்கள் சென்றுள்ளனர். நீச்சல் குளத்திற்கு செல்லக்கூடிய 20 அடி நீர்த்தேக்க தொட்டி மேல்பகுதியில் கட்டையால் மூடப்பட்டி ருந்த நிலையில், அதை கவனிக்காத வெங்கடேஸ்வரா கால னியை சேர்ந்த முகமது ரியாஸ் - பாத்திமா தம்பதியரின் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆரிப் (9) எதிர்பாராத விதமாக தொட் டிக்குள் விழுந்தார். இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் உடனடி யாக அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் ஆரிப்பை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம் பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறு வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

பழைய ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்கக் கோரிக்கை!

உடுமலை, ஜூன் 2- உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. தண்ணீருக்காக பொதுமக்கள் சாலை மறி யல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும், அத்தியாவசிய தேவைக்குக் கூட தண்ணீர் வழங்க முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வரு கின்றன. திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டவுடன், அதுவரை பயன்பாட் டில் இருந்த உள்ளூர் ஆழ்குழாய் கிணறுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டதே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரண மாகக் கூறப்படுகிறது. தற்போது, கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் போதிய தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தற்போதும் தண்ணீர் வழங்கப்படு கிறது. ஆனால், புதிய வீட்டுமனைகள் மற்றும் குடியிருப்பு கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் கடுமையான பற்றாக் குறை நிலவுகிறது. எனவே, இக்கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க, பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் பழைய ஆழ்குழாய் கிணறுகளை போர்க்கால அடிப்படையில் சீர மைத்து, மீண்டும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையே, முடக்கப்பட்ட பல கிணறுகளில் இருந்த விலை உயர்ந்த மின் மோட்டார்கள் மற்றும் மின்சாதனங்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள் ளது. இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து உயர்மட்ட ஆய்வு நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் கனவு இல்லம்: வீடுகளுக்கு பில் தொகையை வழங்கக் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 2– பல்லடம் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத் தின் கீழ், வீடு கட்டி வருவோருக்கு பில் தொகையை வழங்கு மாறு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பய னாளிகள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகள் தாங்கள் குடியிருந்த வீட்டை இடித்து விட்டு இந்த திட்டத்தின் அடிப்படையில் வீடுகள் கட்ட ஆரம்பித்தனர். ஆரம்ப நிலையை தாண்டி மேற்கூரை வரை யும், சில வீடுகள் பாதியளவும் முடிந்துவிட்டது. எனினும் இவர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகை வழங்கப்படா மல் உள்ளது. இதனால் பயனாளிகள் நெருக்கடியில் இருப் பதுடன், மழைக்காலத்தில் வீடு இல்லாமல் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பயனாளிகளுக்கு உரிய பில் தொகையை வழங்கவும், வீடு கட்டி முடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் பயனாளிகள் மனு அளித்தனர்.

இஎஸ்ஐ மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கோவை, ஜூன் 2- சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை யில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனை யில், ஆள் பற்றாக்குறை, அதிக பணிச்சுமை, வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) வழங் காதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாயன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் கள் கூறுகையில், அரசு மருத்துவமனைக ளில் தூய்மை உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வரும் ‘கிரிஸ்டல்’ நிறுவனத்தில் பணியாற்றிய 10 ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப் பட்டனர். பின்னர் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டாலும், அவர்கள் முன்பு பணி யாற்றிய மருத்துவமனைகளில் நியமிக்கா மல் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய் யப்பட்டனர். அதேபோல், தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றி வரும் 10 ஒப்பந்த ஊழியர்களை வேறு அரசு மருத்து வமனைக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை எதிர்த்து, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை அவர்கள் முன்பு பணியாற் றிய இடங்களிலேயே நியமிக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது, என்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக மருத் துவமனை வளாகத்தில் தூய்மை மற்றும் சுகா தாரப் பணிகள் பாதிக்கப்பட்டன. இப்பிரச்சி னைக்கு தீர்வு காண மருத்துவமனை நிர்வா கம் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்குத் திரும்பமாட்டோம் என ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு: இருளில் மூழ்கிய ஆரம்ப சுகாதார நிலையம்

தருமபுரி, ஜூன் 2- பாளையம் புதூர் கிராமத்தில் செயல் பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலுள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாததால், இருளில் நோயாளிகள் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யம், பாளையம் புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இங்கு பாகல் அள்ளி, பாளையம் புதூர், ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, டொக்குபோதன அள்ளி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய, 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அதுமட்டுமின்றி, 24 மணி நேரமும் செயல் பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு பிரசவ மும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுகாதார நிலைய வளாகத்திலுள்ள உயர் கோபுர மின்விளக்கு, 6 மாதத்திற்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் சுகாதார நிலை யம் இருளில் மூழ்கி காணப்படுவதால், அவ சர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிக வும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பணிபுரியக்கூடிய பெண் பணியா ளர்கள் மிகுந்த பயத்துடன் இருந்து வருகின்ற னர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திட மும், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவல ரிடமும் பலமுறை புகார் கூறியும், எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுப்பள்ளியில் பணம் பெற்ற விவகாரம்: விசாரணை

திருப்பூர், ஜூன் 2- அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் கள் பயின்று வருகின்றனர். கோடை விடு முறை முடிந்து பள்ளி துவங்கவுள்ள நிலை யில், 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப் பம் பெறும் மாணவர்களிடம் 250 ரூபாய் ஆசி ரியர்கள் பணம் வாங்குவதாக புகார் எழுந் தது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் சேர்க்கை விண்ணப்பம் கொடுத்துவிட்டு 250 ரூபாய் பணம் கேட்டு பெறக்கூடிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அந்தோணி அம்மாளிடம் கேட்ட பொழுது, மாணவர் சேர்க்கைக்கு அரசுப்பள்ளியில் கட்டணங்கள் பெறப்படுவ தில்லை. ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெறுவதாக புகார் இது வரை தங்களுக்கு கிடைக்காத நிலையில், உரிய முறையில் புகார் கொடுத்தால் நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். மேலும், ஆசி ரியர் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கொடுத்து பணம் பெறும் வீடியோ வெளி யாகி உள்ள நிலையில், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சிறுமி பாலியல் வன்கொலை: கைதான 2 பேரை காவலில் விசாரிக்க மனு

கோவை, ஜூன் 2- சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரு வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள னர். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொலை சம்பவம் தொடர்பாக, கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் விரிவான தகவல்களை பெறவும், வாக்குமூலங்களை பதிவு செய்யவும், கைது செய்யப் பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல் துறை தரப் பில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தரும் நோக்கில், கோவை மாவட்ட காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தட யவியல் அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளை விரைவாகப் பெற்று, அடுத்த ஒரு வார காலத்திற்குள் இந்த வழக்கிற்கான முழுமையான குற்றப்பத்திரிகையை (Charge sheet) நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ள னர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:56.15/105அடி நீர்வரத்து:267 கனஅடி நீர்திறப்பு:750 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:22.50/72 அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:830கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:27.88/160 அடி நீர்வரத்து:68.19கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி

அமைச்சர் அறிவுறுத்தியதை நிறைவேற்றக்கோரி மனு

கோவை, ஜூன் 2- சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவுறுத்தி யதை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திரா விட விடுதலை கழகத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்த னர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிட விடு தலைக் கழகத்தினர் செவ்வாயன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், கடந்த 31 கோவைக்கு வந்த சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் நிலவும் சாதிய தீண்டாமை காரணமாக அரசு பேருந்துகள் அண்ணா நகருக்குள் செல்லாமல் புறக்கணிப் பது குறித்து பேசிய அவர், அனைத்து மக்களுக்கும் பேருந்துச் சேவை சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன் என தெரிவித்திருந்தார். அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தனியார் நிறுவனத்திற்கு மின்பாதை அமைக்க எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 2- பெருந்துறை அருகே மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு மின்பாதை அமைப்ப தற்கான திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக வறட்சி பாதித்த பகுதிகளாக பெருந்துறை அருகே துடுப்பதி, சின்னமல்லம்பாளையம், பாலக்கரை ஆகிய பகுதிகள் இருந்தன. அத்திகடவு - அவிநாசி நீரேற்று திட்டம் மற்றும் கிடைக்கும் ஓரளவு மழைய ளவு காரணமாக, விவசாயம், கால்நடை வளர்ப்பு நடைபெறுகிறது. இந்நிலை யில், சீரணம்பாளையம் குளத்திற்கு எதி ரில் உள்ள சிறிய ஓடை வழியாக மில்கி மிஸ்ட் நிர்வாகத்திற்கு மின் கோபுரம் அமைத்து உயர் மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விவசாயி களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மற்றும் மழை காரணமாக 15 கிணறுகள் மற் றும் ஆழ்துறை கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது. ஓடையின் இருபுறமும் வள ரும் புல் புதர்கள் ஆடு, மாடுகளுக்கு ஓரளவு பயன் தருகிறது. அப்பகுதியில் 500 தென்னை மரங்கள் உள்ளன. அது விவசாயிகளின் குடும்ப செலவிற்கு உதவியாக இருக்கிறது. உயர் அழுத்த மின்பாதை அமைந்தால், மழைக்காலங் களில் ஓடையில் உடைப்பு ஏற்படும். சீரணம்பாளையம், வீராச்சிபாளையம், துடுப்பதி ஆகிய ஊர்களின் மயானம், எரி மேடை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அவநாசி - அத்திக்கடவு திட்டத் தின் தண்ணீர் நிறுத்தப்படும். வாய்க் கால் மற்றும் ஓடை என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பது கடும் ஆட் சேபணைக்குரியது. ஆகவே இத்திட்டத் திற்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரி டம் ஆட்சேபனை மனு அளித்தனர்.

நியாயமான போராட்டத்தை களங்கப்படுத்துவதா? இந்து மக்கள் கட்சிக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

கோவை, ஜூன் 2- இளைஞர்களின் நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற போராட் டத்தை களங்கப்படுத்தும் இந்து மக்கள் கட்சிக்கு வாலிபர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.என்.ராஜா, செயலாளர் எம்.தினேஷ் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அர சின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். கோவை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை யைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக் கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த நியாயமான போராட்டத்தை இந்து மக்கள் கட்சி திரித்துக்கூறி, அவதூறு பரப்பும் நோக் கில் வழக்குப்பதிவு செய்யக் கோருவது முற் றிலும் ஜனநாயக விரோத செயலாகும். மக் கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டு வரும் தங்கள் அமைப்பு மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக் கவை. அரசியல் சாசனத்தின் அடிப்படை விழு மியங்களை மதிக்காமல் வெறுப்புணர்வை யும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வகை யில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், வேலைவாய்ப்பு கேட்பது ஒரு போதும் குற்றமாகாது. காலிப்பணியிடங் களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர் காலத்தை பறிப்பதே மக்களுக்கு எதிரான செயல். மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை இதுபோன்ற மிரட்டல்களாலும், பொய்யான குற்றச் சாட்டுகளாலும் ஒருபோதும் முடக்க முடி யாது. மக்கள் நலன், சமூக நீதி, மதச்சார் பின்மை மற்றும் இளைஞர்களின் உரிமை களுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து சமரசமின்றி போராடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் புழக்கம் போலீசார் அதிரடி சோதனை

கோவை, ஜூன் 2– போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செவ்வாயன்று அதிகாலை கர்நாடகா, கேர ளம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த அனைத்து ஆம்னி பேருந்து களிலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற் கொண்டனர். மேலும், பேருந்துகளில் வந்த பயணிக ளின் உடைமைகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் இயங்கி வரும் பார்சல் அலுவலகங்களி லும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள் ளப்பட்டன.