தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

7 May 2026, 11:43 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர், மே 7- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தகுதியுள்ள மாணவர் கள் மே 7 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, இக்கல்லூரியில் இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. மொத்தம் 1008 இடங்களுக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்ப டையில் சேர்க்கை நடைபெற உள்ளது. ஷிப்ட் 1: பி.காம் (பொது, சி.ஏ, சர்வதேச வணிகவியல்), பி.பி.ஏ, வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், பி.சி.ஏ, விலங்கியல் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. ஷிப்ட் 2: பி.காம் (பொது, சி.ஏ, சர்வதேச வணிகவியல்) மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் செயல்படு கின்றன. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரி யில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க எமிஸ் எண், பிளஸ்-2 பதிவு எண், சாதிச் சான்றிதழ் எண், ஆதார் எண் மற்றும் மதிப்பெண் விவரங்கள் அவசியம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கு முன்னதாகவே மாணவர்கள் தங்கள் ஆதார் அட்டையை இ-சேவை மையம் மூலம் புதுப்பித்துக் கொள்ள (Update) அறிவுறுத்தப்படுகிறார்கள். சாதிச் சான்றி தழை மின் ஆளுமை சான்றிதழாக (e-certificate) வைத்தி ருக்க வேண்டும். அரசு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது கட்டாயமாகும். சேர்க்கை குறித்த சந்தேகங்கள் இருப்பின், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்லூரியில் உள்ள ’மாணவர் தகவல் மையத்தை’ நேரில் அணுகலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை கொலை செய்த மகன்

சேலம், மே 7- சன்னியாசிகுண்டு பகுதியில், சொத்து தகராறில் தந் தையை மகன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சன்னியாசிகுண்டு பகு தியை சேர்ந்த தனபால் (75) என்பவர் பஞ்சர் கடை நடத்தி வந்தார். அவருடைய மகன் ஸ்ரீதர் (45), காய்கறி கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தனபால் பெயரில் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தை தனது பெயரில் எழுதித் தருமாறு ஸ்ரீதர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரி கிறது. இந்நிலையில், வியாழனன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையை தாக்கியதாக கூறப் படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த பொதுமக்கள், ஸ்ரீதரை பிடித்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீசா ரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார், தனபாலின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய அரசு துணை நிற்க வேண்டும் விசைத்தறி சம்மேளனம் வேண்டுகோள்

நாமக்கல், மே 7- தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விசைத்தறித் தொழிலின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் வெற்றியை பெற்ற விஜய்க்கு பாராட்டுகள். தேர்தல் அறிக்கை யில் விசைத்தறித் தொழிலுக்கு ஆதரவு அளிப்பதாகவும், இலவச மின்சார அளவை 1500 யூனிட்டாக உயர்த்துவதாக வும் அறிவித்திருப்பது சிறு விசைத்தறியாளர்களுக்கு பெரும் பயனளிக்கும். மேலும் கைத்தறி, பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி உற்பத்தித் துறைகளுக்கு மதிப்பு கூட்டும் நடவடிக் கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கல்வி உதவி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

தருமபுரி, மே 7- மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவரை காவல் துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், 16 வயதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திற னாளி மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனி டையே, பெற்றோர்கள் சிறுமியை வீட்டில் விட்டு விட்டு, உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மிலிட்டரி சரவணன் (51) என்பவர், தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரி டம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி யின் தாய், தருமபுரி மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதியிடம் புகாரளித்தார். அவரது விசாரணையில், சிறுமி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரவணன் குறித்து தெரி வித்துள்ளார். அதைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளி நல அலுவலர், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரவணன் மீது புகாரளித்தார். அதன்பேரில், மகளிர் காவல் துறையினர் சரவணன் மீது போக்சோ சட் டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

​​​​​​தனியார் நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தஒப்பந்த தொழிலாளர்கள் மீட்பு: போலீசார் விசாரணை

கோவை, மே 7– மலூமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 120 ஒப்பந்த தொழி லாளர்களை தெற்கு வருவாய் கோட் டாட்சியர் தலைமையிலான அதிகாரி கள் அதிரடியாக மீட்டனர். கோவை - பொள்ளாச்சி சாலை, மலு மிச்சம்பட்டி ஹிந்துஸ்தான் கல்லூரிக்கு எதிரே செயல்பட்டு வரும், இன்டோ செல் என்கிற தனியார் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களை கடந்த சில நாட்களாக வெளியே செல்ல விடாமல் தடுத்து, குறிப்பிட்ட இடத்தில் சிறை வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு வருவாய் கோட்டாட்சியர், காவல்துறையினரு டன் இணைந்து அந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது அங்குள்ள விடுதி போன்ற பகு தியில் சுமார் 120 தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் அவர் கள் பணியாற்றிய சூழல், ஊதிய நிலுவை மற்றும் சிறை வைக்கப்பட்ட தற்கான காரணங்கள் குறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்த இந்த சிறை மீட்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான முறை யில் தொழிலாளர்களை அடைத்து வைத்தது தொடர்பாக அந்த நிறுவனத் தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் களிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.