தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

16 Jun 2026, 12:13 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அணைகள் நிலவரம்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:19.50/72 அடி நீர்வரத்து:134கனஅடி நீர்திறப்பு:760கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:60.45/160 அடி நீர்வரத்து:323.63கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:63.80/120அடி நீர்வரத்து:148கனஅடி நீர்திறப்பு:286கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:36.64/60அடி நீர்வரத்து:757கனஅடி நீர்திறப்பு:927கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:40.16/90அடி நீர்வரத்து:149கனஅடி நீர்திறப்பு:50கனஅடி

மாணவியின் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: 2 பேர் கைது

கோவை, ஜூன் 15- கோவையில் தனியார் கல்லூரி மாணவி யின் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் அதிரடி யாகக் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரு கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு இளை ஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் அந்த மாண வியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவியின் அந் தரங்க வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், தங்களுக்குக் கீழ்ப் படியாவிட்டால் அதனை இணையதளங்க ளில் வெளியிடப் போவதாகவும் கூறி இரு இளைஞர்களும் அந்த மாணவியை கடுமை யாக மிரட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான அந்த மாணவி, உடனடியாக கோவில்பாளை யம் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் அடிப்படை யில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையி னர், சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க தனிப் படை ஒன்றை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார், சேலம் விரைந்து சென்று மாணவியை மிரட்டிய அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையி னர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

உடுமலை, ஜூன் 15- உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களுக்குட் பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருடாந்திர கணக்கு தணிக்கை மற்றும் மக்கள் குறைதீர்க்கும் ’ஜமாபந்தி’ நிகழ்ச்சி செவ்வாயன்று துவங்கி, ஜூன் 23 ஆம் தேதி வரை வட்டாட்சி யர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதன்படி, ஜூன் 16ல், உடுமலை உள்வட்டத்திற்குட்பட்ட சின்னவீரம்பட்டி, உடுமலை, பெரியகோட்டை, கணக்கம் பாளையம், பூலாங்கிணர், போடிபட்டி, கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள். ஜூன் 17: குறிச்சிக்கோட்டை உள் வட்டத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, பள்ள பாளையம், தளி, குரல்குட்டை, ஆண்டியகவுண்டனூர், எலை யமுத்தூர், கல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்கள். ஜூன் 18: பெரிய வாளவாடி உள்வட்டத்திற்குட்பட்ட எரிசனம்பட்டி, கொடங்கி யம், கிருஷ்ணாபுரம், உடுக்கம்பாளையம், தேவனுார்புதூர், பெரியவாளவாடி, தீபாலபட்டி உள்ளிட்ட கிராமங்கள். ஜூன் 19: குடிமங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட பூளவாடி, கொண்டம்பட்டி, ஆமந்தகடவு, குடிமங்கலம், கோட்டமங்க லம், பொன்னேரி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்கள். ஜூன் 23: பெதப்பம்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட மூங்கில்தொழுவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, தொட்டம்பட்டி, அணிக் கடவு, பண்ணைக்கிணறு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறு கிறது. இந்நிகழ்விற்கு வருவாய் கோட்டாச்சியர் தலைமை யில் நடைபெறுகிறது. மடத்துக்குளம் தாலுகாவில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதன்படி, ஜூன் 16: மடத்துக்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட சங்கராமநல்லூர் தெற்கு/வடக்கு, கொழுமம், சோழமாதேவி, கொமரலிங் கம் மேற்கு/கிழக்கு, சர்க்கார் மற்றும் அக்ரஹார கண்ணாடி புத்தூர் உள்ளிட்ட கிராமங்கள். ஜூன் 17: துங்காவி உள்வட்டத் திற்குட்பட்ட கடத்தூர், கணியூர், துங்காவி, மெட்ராத்தி, காரத் தொழுவு, ஜோத்தம்பட்டி, தாந்தோணி, மைவாடி உள்ளிட்ட கிராமங்கள். பொதுமக்கள் தங்களின் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த நாள்களில் அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்ட கலந் தாய்வு ஜூன் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடை பெற்றது. மொத்தமுள்ள 1008 இடங்களில் 600 இடங் கள் நிரம்பி விட்டன. இதில் தமிழ் இலக்கியம் (17), ஆங்கில இலக்கி யம் (40), பொருளியல் (4), வரலாறு (10), பிகாம் (14), பிகாம். சிஏ (1), பிபிஏ (2), பிகாம் ஐபி (7), இயற்பி யல் (29), வேதியியல் (54), விலங்கியல் (33), ஆடை வடிவமைப்பு நாகரிகம் (7), பிசிஏ (23), கணிதம் (48) கணினி அறிவியல் (ஷிப்ட் 1 (10), கணினி அறிவி யல் ஷிப்ட்2 (57) பி.காம் (19), பி.காம் சிஏ (15), சர்வ தேச வணிகவியல் (26) பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தர வரிசைப் பட்டியல் 4001 முதல் 6000 வரை செவ்வாய் மற்றும் புதனன்று கலந் தாய்வு நடைபெறும். 16 ஆம் தேதி செவ்வாயன்று கலைப் பாடப்பிரிவு களுக்கும், 17 ஆம் தேதி புதனன்று அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் காலை 9.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்கள் முகவரியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வரும் மாணவருடன் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். உரிய அசல் சான்றிதழ்கள் அனைத்தை யும் கொண்டு வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பின் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. உரிய நேரத்தில் கலந்தாய் வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் வ. கிருஷ்ணன் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் போர்வையில் பெண்களுக்கு மிரட்டல்

திருப்பூர், ஜூன் 15 - அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களி டம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மிரட்டல் விடுத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர். திருப்பூர், நெருப்பெரிச்சல், பாரதி நகர், அடுக்கு மாடி குடியிருப்பில் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்ப டுத்தி வருகின்றனர். வீட்டு அருகில் மரம், செடி, கொடிகள் வளர்த்தால் பிடுங்கி எரிந்து விடுவதாக வும், கழிவறைக்கு செல்லும் குழாய்களை உடைத் தும், அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி குடி நீர் வழங்கும் போது 300 லிட்டர் மட்டுமே ஒரு குடும் பம் பிடிக்க வேண்டும் என கட்டளை இடுகின்றனர். மேலும் பெண்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது செல்போனில் படம் பிடிப்பதாகவும், அதை தட்டி கேட்ட அப்பகுதி பெண்ணை அடித்துள்ளனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாருக்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறினர். எனவே சமூக ஆர்வலர் என்ற போர்வையில் எங்கள் பகுதியில் பத்து ரூபாய் இயக்கம் எனக் கூறி சுற்றும் செல்வம் என்ற பட்டத்துறை மற்றும் கோ என்ற இளங்கோ ஆகியோர் சேர்ந்து பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு திங்களன்று அளித்தனர்.

ஜூன் 19-ம் தேதி பிஎம்விபிஆர்ஒய் திட்ட விழிப்புணர்வு

திருப்பூர், ஜூன் 15 - இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில், பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் தொடர்பான பயன்கள் வழங்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜூன் 19-ம் தேதி நடை பெறுகிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆணையர் விசிக் ரஞ்சன் பேசுகை யில்: திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி. சீனியர் பள்ளி யில் மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி, நாடு முழுவதும் 200 இடங்களில் நடைபெறும் உள்ளூர் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இங்கு நடைபெறுகிறது. திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து தொழில்துறையினர், வேலை வாய்ப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன. வேலைவாய்ப்பை அதி கரித்தல், முறையான வேலைவாய்ப்பில் பங்கேற்பை ஊக்கு வித்தல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்க மாகக் கொண்டுள்ள இந்தத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் பங்கேற்று பயன்பெறுமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அழைப்பு விடுத் துள்ளது.

சமூக ஆர்வலர் போர்வையில் பெண்களுக்கு மிரட்டல்

திருப்பூர், ஜூன் 15 - அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களி டம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மிரட்டல் விடுத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர். திருப்பூர், நெருப்பெரிச்சல், பாரதி நகர், அடுக்கு மாடி குடியிருப்பில் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்ப டுத்தி வருகின்றனர். வீட்டு அருகில் மரம், செடி, கொடிகள் வளர்த்தால் பிடுங்கி எரிந்து விடுவதாக வும், கழிவறைக்கு செல்லும் குழாய்களை உடைத் தும், அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி குடி நீர் வழங்கும் போது 300 லிட்டர் மட்டுமே ஒரு குடும் பம் பிடிக்க வேண்டும் என கட்டளை இடுகின்றனர். மேலும் பெண்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது செல்போனில் படம் பிடிப்பதாகவும், அதை தட்டி கேட்ட அப்பகுதி பெண்ணை அடித்துள்ளனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாருக்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறினர். எனவே சமூக ஆர்வலர் என்ற போர்வையில் எங்கள் பகுதியில் பத்து ரூபாய் இயக்கம் எனக் கூறி சுற்றும் செல்வம் என்ற பட்டத்துறை மற்றும் கோ என்ற இளங்கோ ஆகியோர் சேர்ந்து பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு திங்களன்று அளித்தனர்.

துப்பாக்கி முனையில் நகை கொள்ளை: 2 பேர் கைது

நாமக்கல், ஜூன் 15– ராசிபுரம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் 20 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இரண்டு இளைஞர் களை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி (58), கணவரை இழந்த நிலையில் தனி யாக தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அவர் வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர் கள் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட் டின் வெளிப்புற கதவை பூட்டி விட்டு தப்பிச் சென்றுள் ளனர். இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விமலா உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ராசிபுரம் அருகே முருங்கப்பட்டி பகுதி யைச் சேர்ந்த ராஜகுகன் (22) மற்றும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (22) ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையி னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜகுகன், பாதிக்கப்பட்ட கலைச் செல்வியின் மருமகனுக்கு சொந்தமான செங்கல் சூளை யில் பணியாற்றியவர் என்றும், ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகியவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரும் அவரது உறவினருமான அஜித்குமா ரும் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகளிடமிருந்து 9¼ பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகள் மற்றும் பணத்தை மீட்பதற்கும், சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மனு அளிக்கும் பிரிவில் சர்வர் கோளாறு: மக்கள் அவதி

சேலம், ஜூன் 15- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மனு அளிக் கும் பிரிவில் சர்வர் கோளாறால், பொதுமக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகங்களில் வாரம்தோறும் திங்கட்கிழமை மனு நாள் என்பதால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைக ளுக்கு மனு அளிப்பது வழக்கம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று காலை முதல் பொதுமக்கள் மனுக்களை அழிக்க வந்த நிலையில், மனுக்களை கணினியில் ஏற்றி பராமரிக்க சர்வர் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சான்றிதழ்கள் பட்டா சிட்டா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழங் கப்பட்ட மனுக்களுக்கான கணினி ரசீதை பெற முடி யாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் சர்வர் பிரச்சினை இருந்ததன் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசை யில் காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாரம்தோறும் திங்கட்கிழமை மனு நாள் என்ப தால் அரசு அதிகாரிகள் உரிய முறையில் சர்வர் கோளாறு ஏற்படாத வண்ணம் சேவை அளிக்க வேண் டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந் தது.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி யில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடை பெற்றது. மொத்தமுள்ள 1008 இடங்களில் 600 இடங் கள் நிரம்பி விட்டன. இதில் தமிழ் இலக்கியம் (17), ஆங்கில இலக்கி யம் (40), பொருளியல் (4), வரலாறு (10), பிகாம் (14), பிகாம். சிஏ (1), பிபிஏ (2), பிகாம் ஐபி (7), இயற்பி யல் (29), வேதியியல் (54), விலங்கியல் (33), ஆடை வடிவமைப்பு நாகரிகம் (7), பிசிஏ (23), கணிதம் (48) கணினி அறிவியல் (ஷிப்ட் 1 (10), கணினி அறிவி யல் ஷிப்ட்2 (57) பி.காம் (19), பி.காம் சிஏ (15), சர்வ தேச வணிகவியல் (26) பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தர வரிசைப் பட்டியல் 4001 முதல் 6000 வரை செவ்வாய் மற்றும் புதனன்று கலந் தாய்வு நடைபெறும். 16 ஆம் தேதி செவ்வாயன்று கலைப் பாடப் பிரிவுகளுக்கும், 17 ஆம் தேதி புதனன்று அறி வியல் பாடப்பிரிவுகளுக்கும் காலை 9.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்க ளுக்கு அவர்கள் முகவரியில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வரும் மாணவருடன் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். உரிய அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பின் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. உரிய நேரத் தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந் தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவு களில் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.