கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 Nov 2026, 11:58 pm

புகாரளிப்பவர்களை மிரட்டும் காவல்துறை!ஆட்சியரிடம் ஆட்டோர் ஓட்டுநர்கள் புகார்

உதகை, நவ.2-புகாரளிப்பவர்களை காவல் துறையினர் மிரட்டுவதாக உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முறையிட்டனர்.நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்களன்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் குறைதீர்கூட்டம் நடைபெற். இக்கூட்டத்தில், கொளப்பள்ளி பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் கொடுத்த மனுவில், பந்தலூரில் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயங்குவதில்லை. ஒரு சிலரின் செல்வாக்கை பயன்படுத்தி மினி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல், தாங்கள் விரும்பிய வழித்தடங்க

ளில் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து வசதியை பெற முடியாத நிலை ஏற்

பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை புகாரளித்தபோதும், புகார் பெற்றதற்கான சி.எஸ்.ஆர். ரசீதுகள் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல், புகார் அளிப்ப

வர்களை மிரட்டுகின்றனர். மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தினர் போக்குவரத்து துறையில் செல்வாக்குடன் செயல்படுவதால், அரசு பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில மினி பேருந்துகள் முறையான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது: உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

கோவை, நவ.2-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், மீறி வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் திங்களன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் ஜெயம் பாண்டியன் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடிக்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த நிறுவனங்களாக இருந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால்நடவடிக்கை எடுக்கப்படும். சங்கங்களில் உறுப்பினராக இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருந்துகள்கூட கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தினாலும் அப்பேருந்துகள் உடனடியாக விடுவிக்கப்படாது. பொங்கல் பண்டிகை வரை கூட பேருந்துகள் விடுவிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் தனித்தனியாக சோதனை செய்து பேருந்துகளை இயக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. இருப்பினும், போதைப்பொருள் கடத்தலுக்கு ஓட்டுநர்கள் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பயணிகளிடம் பட்டாசுகள் இருந்தால் அவை பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படும். மேலும், ஆம்னி பேருந்துகள் மணிக்கு 90 கி.மீ. வேகத்திற்கு மேல் இயக்கப்படுவதில்லை. பேருந்துகள் மெதுவாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென வேகம் அதிகரிக்கும் சூழலில் மட்டுமே அவை வேகமாக செல்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, என்றார்.

மண்சரிவால் உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்குரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

உதகை, நவ.2-குன்னூரில் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் கூறுகையில், குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில், பர்லியார் பகுதியில்மண்சரிவில் சிக்கி அரசு போக்குவரத்துக்கழக உதகை ண்டலம் குன்னூர் கிளை ஓட்டுநர் ஜனகராஜ் உயரிழப்பிற்கு மிழக முதல்வரோ, போக்குவரத்து துறை அமைச்சரோ இரங்கல் தெரிவிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயிரிழந்த ஜனகராஜின்குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சம்வழங்கியதை மறு பரிசீலனை செய்து, அவரின்குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்பஅரசு வேலை வழங்க வேண்டும். படுகாயமடைந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால், அவர் சிகிச்சை முடிந்து பணிக்கு வரும் வரை முழுமையான சம்பளம் வழங்க வேண்டும், என்றார்.

இன்று குழந்தைகள் அறிவியல் மாநாடு

திருப்பூர், நவ.2-திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், செவ்வாயன்று (இன்று) 32 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது.நீடித்த நிலைத்தன்மைக்கு அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற மையப் பொருளில் இந்த மாநாடுநடைபெறுகிறது. கோவை மண்டல வீட்டு வசதி துணைப்பதிவாளர், திருப்பூர் குமரன் கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் வ.செந்தில்நாதன் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில்மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து குழந்தைகள் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கின்றனர். பிற்பகல்பரிசளிப்புநிறைவு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஇணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.

வெளுத்து வாங்கிய கனமழை

திருப்பூர், நவ.2-திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களாகவே வெப்பம்வாட்டி வதைத்த நிலையில் திங்களன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் மதியம் 3 மணியளவில் திடீரென வானில்சூழ்ந்த கருமேகங்களால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, குமரன் சாலை, புது மார்க்கெட் வீதி,கருவம்பாளையம், வீரபாண்டி, எஸ்ஏபி., காந்திநகர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கெனவே பிரதான சாலைகள் கடந்த வாரம் பெய்த மழையில் சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ள நிலையில் பல பகுதிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பணத்தை மீட்டு தரக்கோரிபெண் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், நவ.2-வீட்டுமனை வாங்கித்தருவதாகக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்தவர் செண்பகவள்ளி (50). சேவூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்பழனிச்சாமி என்பவர், வீட்டுமனை வாங்கித் தருவதாக செண்பகவள்ளியிடம் இருந்து ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்றிருக்கிறார். ஆனால், வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்ததாக தெரிகிறது. மேலும், பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி, அவிநாசி மற்றும் சேவூர் காவல்நிலையத்தில் பலமுறை மனு கொடுத்ததாக செண்பகவள்ளிதெரிவித்தார். எனினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்றுவந்து தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை உடனடியாக தடுத்து நிறுத்திஅவரிடம் விசாரித்து மனுவை பெற்றுக் கொண்டனர். அப்பெண்ணை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுபோல், மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த கதிர்வேல் (28),அதிகாரிகள் விடுமுறை வழங்காமல் உள்ளனர். மேலும் தன்னை தரக்குறைவாக பேசுகிறார்கள் எனக்கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்! சிபிஎம் புகார்

உடுமலை, நவ.2–அனிக்கடவு ஊராட்சியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, ஞாயிறன்றுநடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட பொட்டையம்பாளையம் துணை நீரேற்று நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 3 லட்சத்து 32 ஆயி

ரம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வெறும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நாளொன்றுக்கு 2 லட்சத்து22 ஆயிரம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாகஊராட்சிப் பகுதிகளில் 30 நாட்களுக்கு ஒருமுறை, அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி ஏற்கனவே பொதுமக்கள் போராட்டம் நடத்தியதுடன், இனிமேல் முறையாக குடிநீர் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமான உறுதிமொழியும் பெறப்

பட்டுள்ளது. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, அனிக்கடவு ஊராட்சிக்கு நாளொன்றுக்கு உரிய அளவான 3 லட்சத்து 32 ஆயிரம் லிட்டர் குடிநீரை முழுமையாக வழங்க வேண்டும். குடிநீர்விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிரந்தரத்தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திஞாயிறன்று அனிக்கடவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். மேலும்,பலமுறை போராட்டம் நடத்தியும், மனுக்கள் அளித்தும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாதது பொதுமக்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், நவ.2-காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கிராமப்புற வேலை திட்டத்தில், அட்டை வைத்திருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கவேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், காளிபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றி

யச் செயலாளர் ஆர்.சந்திரன் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், காளிபாளையம், காளிபாளையம் புதூர், புதுப்பாளையம், செந்தில் நகர் 1, 2, எஸ்.பி.கே. நகர், பாலன் நகர், ஜி.என். பாலன் நகர், எஸ்.ஆர்.நகர், பள்ளபாளையம் அறிவொளி நகர், சுகவனம் நகர், தீரன் சின்னமலைநகர், குமரன் நகர், குருவாயூரப்பன் நகர், செரங்காடு, படையப்பா நகர், வாரணாசிபாளையம், நியூ குருவாயூரப்பன் நகர், தாண்டவன் காட்டுப்புதூர், ரோஜா நகர், கிழக்கு சீரணம்பாளையம், தெற்கு சீரணம்பாளையம், அபிராமி நகர்,சேனாபதி செட்டிபாளையம், எம்.பி.எஸ் நகர் என இந்த ஊராட்சியில் இருக்கும் அனைத்து ஊர்களிலும் கிராமப்புற வேலைஉறுதித்திட்ட அட்டை வைத்திருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். விபி ஜி ராம்ஜி என்ற இந்த திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திறக்கப்படாத சுகாதார நிலையம்காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வாரணாசிபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார நிலையம் இரண்டரை ஆண்டு காலமாக திறக்கப்படாமல் இருப்பதை உடனடியாகதிறக்க வேண்டும். இப்பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காளிபாளையம், குருவாயூரப்பன் நகர் கிளைகள் சார்பிலும் கிராமசபை கூட்டத்தில்மனு அளிக்கப்பட்டது.

தெருவோர வியாபாரிகளுக்கு தற்காலிககடை நடத்த அனுமதி வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ.2-பண்டிகை காலங்களில் தெருவோர வியாபாரிகளுக்கு தற்காலிக வணிக அனுமதி வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு பொதுத்தொழிலாளர் சங்க செயலாளர் ஜி.ரவி எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் மாநகரப் பகுதிகளில் பண்டிகை காலங்களில் தெருவோர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக சிறு வணிகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பண்டிகை காலங்களில் தெருவோர வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பண்டிகை காலத்திற்கு மட்டும் தற்காலிக வணிக அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து, வியாபாரிகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்வியாபாரம் செய்ய உரிய அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், நவ.2-நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20-ஆக இருந்த நிலையில், தற்போது 10 காசுகள் உயர்ந்து ரூ.6.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்ந்து வருகிறது. தினந்தோறும் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான முட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளம், ஆந்திரா உள்ளிட்டமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டைதொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டை விலையில் மாற்றம் இருக்கும். கடந்த சில நாட்களாகவே முட்டை விலை ரூ.5.50 காசுகள் முதல் ரூ.5.90 காசுகள் வரை என கணிசமான விலையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, ரூ.6.20 பைசாக்கு விற்கப்பட்டு வந்த ஒரு முட்டை தற்போது திங்களன்று நிலவரப்படி ரூ.6.30 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், நுகர்வு அதிகரிப்பு காரணமாகவும் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முட்டை விலை இன்னும் உயரக்கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து முட்டை விலை அதிகரித்து வருவதால் முட்டை உற்பத்தி சார்ந்த தொழில் மேற்கொள்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெருநாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு: அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்

திருப்பூர், நவ.2-தெருநாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் ஆட்டுப்பட்டிக்குள் கடந்த மே 30ஆம் தேதியன்று தெரு நாய்கள் புகுந்து கால்நடைகளை கடித்துக் குதறின. இதில் 6 செம்மறி ஆடுகளும், 10 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. இதற்கான நியாயமான இழப்பீட்டை, அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை கடந்த அக்.26 அன்று விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா ஒரு செம்மறி ஆடு மற்றும் ஒரு வெள்ளாட்டிற்கு வழங்கக்கூடிய நியாயமான இழப்பீட்டு தொகை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து தெரு நாய்களால் கால்நடைகளை இழக்கும் விவசாயிகள் கூறுகையில், நீண்ட காலமாக நியாயமான இழப்பீட்டிற்காக போராடி வரும் கால்நடை வளர்ப்போருக்கு இந்த உத்தரவு ஒரு முக்கியமானமுன்னேற்றமாகும் என்று தெரிவித்தனர்.

ரூ.1.14 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை, நவ.2-கோவை வந்த விமானத்தில் பயணித்த பெண் பயணியிடம் இருந்து ரூ.1.14 கோடி மதிப்பிலான 808.27 கிராம் தங்கத்தை சுங்க புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சார்ஜாவில் இருந்து திங்களன்று கோவைக்கு வந்த விமானப் பயணிகளிடம் சுங்க புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பயணி ஒருவரை மறித்து சோதனையிட்டனர். அதில், அவர் அணிந்திருந்த உடைகளுக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 808.27 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.