கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
3 Jul 2026, 1:24 am

தமுஎகச-வினரின் வரலாற்றுத் தேடல்!

அவிநாசி, ஜூலை 2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் அவிநாசி கிளை சார்பில், மாதந்தோறும் தேநீர் இலக்கியச் சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் வெள்ளி விழா (25ஆவது) சந்திப்பை வரலாற்றுத் தடங்களின் வழியே கொண்டாடும் விதமாக, கேரளம் மாநிலத்திற்கு இலக்கிய நய மிக்க தொல்லியல் மரபு பயணம் அண்மையில் மேற்கொள் ளப்பட்டது. தொல்லியல் ஆர்வலர் சாய்நாத் வழிகாட்டுதலில் அமைந்த இப்பயணத்தில் அவிநாசியைச் சேர்ந்த 28 இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். பயணத்தின் தொடக்கமாக, மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் தொன்மையான மனித வாழ்வின் சான்றாக புதைந் துள்ள ‘குமிட்டிபதி குகை’ பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் வாழ்ந்த ‘துஞ்சன் குருமடம்’ சென்று, அவரின் கல்வி மற்றும் இலக்கிய மரபுகள் குறித்து கலந்துரையாடினர். கேரள பாரம்பரிய நாலுக்கட்டு கட்டிடக்கலைக்கும் கூட்டுக்குடும்ப பண்பாட்டிற் கும் சான்றாக விளங்கும் ‘புதுமனைச் சேர்த் தறவாடு’ மற்றும் ‘சம்பத்தில் தறவாடு’ ஆகிய இல்லங்களை பார்வையிட்ட னர். மேலும், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜ யன் நினைவகத்தில் அவரது சமூகச் சிந்தனைகள் குறித்தும், கொல்லங்கோட்டில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னமான ‘கல்பதுக்கை’ வழியே பல்லாயிரமாண்டு மனித வாழ்வியல் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். இறுதியாக, பழமை வாய்ந்த வெம்பாத் மகாதேவர் கோவிலின் சிற்ப எழிலைக் கண்டு மகிழ்ந்தனர். காலம் தடம் பதித்த வரலாற்றுச் சுவடு களை நேரில் தரிசித்த இந்த வெள்ளி விழாப் பயணம், தங்க ளுக்குள் புதியதோர் இலக்கியப் பார்வையை விதைத்துள் ளதாக அவிநாசி கிளை நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரி வித்தனர்.

வீட்டில் பிரசவம்: பெண் உயிரிழப்பு கணவர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர், ஜூலை 2- வீட்டில் பிரசவம் பார்த்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், குன்னத்துர் வட்டம், பி.தனவாய் பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சசிகலா. இவரது கணவர் குழந்தைசாமி. ஜூன் 24 ஆம் தேதியன்று அதிகாலை 5.40 மணியளவில் கணவர் மற்றும் உறவினரால் சசிகலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. 2.7 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பெற்றதை தொடர்ந்து, நஞ்சுகொடி வெளி வராத தால் சசிகலாவிற்கு தீவிர உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. தனி யார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்து பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் சசிகலா வின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர் விருப்பப் படி பரிந்துரை செய்தனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். சசிகலா 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதன் பிறகு மீண்டும் சசி கலா கருவுற்றுள்ளார். ஆனால், அவரது கர்ப்பத்தை மறைத் துள்ளனர். மருத்துவமனையில் எந்த விதமான கர்ப்பகால சிகிச்சைகளும் எடுத்துக்கொள்ளவில்லை. மருத்துவமனை யில் சேவைகளை பயன்படுத்தாமல், இயற்கை வழியில் வீட்டி லேயே பிரசவம் பார்க்க எண்ணி இருந்ததால் கர்ப்பத்தை பற்றி யாரிடமும் கூறவில்லை. இதுதொடர்பாக சசிகலாவின் கணவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை மூலம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவ தாக ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.

குண்டும், குழியுமான சாலைகள்

உடுமலை, ஜூலை 2- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மலையாண்டி பட்டினம் கிழக்கு பகுதியில் கே.சி.பி நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், குடி யிருப்பு அமைக்கப்பட்ட போது போடப்பட்ட தார் சாலைகள் தற்போது முற்றிலும் பெயர்ந்து, ஜல்லிக் கற்கள் சிதறி குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இச்சாலை மடத்துக்குளம், மலையாண்டி கவுண்டனூர், கண்ணம்ம நாயக்கனூர், எலைய முத்தூர் போன்ற கிராமங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்குகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு, இப்பகுதி இணைப்புச் சாலைகளை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்

உதகை, ஜூலை 2- கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, அதிக விதைக் கிழங்கு வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இந்திய கூட்டுறவு அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை சிறப்பிக்கும் வகை யில் 29.6.2026 முதல் 6.7.2026 வரை கூட்டுறவு வாரமாக கொண் டாடப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக நீலகிரி கூட்டு றவு விற்பனை சங்கம் சார்பில், விவசாயிகள் பாராட்டு விழா, விவசாயிகள் காசுக்கடன் (KCC), மற்றும் விவசாயிகளுக்கு நேரடி பலன் மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புத னன்று நடைபெற்றது. நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநரும், கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளருமான அய்யனார் முன்னிலை வகித்து, அதிக விதைக்கிழங்கு வழங்கிய விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இக்கூட்டத்தில், விவசாயிக ளுக்கு கேசிசி மற்றும் டிபிடி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய கூட்டுறவு வங்கியின் சேவைகள், பயிர் காப்பீடு, மகளிர் குழு கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் வழங்கப்படும் விவசாய சேவைகள், வேளாண் இயந்தி ரங்கள், இ-வாடகை, மகளிர் குழுக்கடன் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அணைகள் நிலவரம்

சோலையார் அணை நீர்மட்டம்:77.04/160 அடி நீர்வரத்து:876.60கனஅடி நீர்திறப்பு:563.29கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:15.25/72 அடி நீர்வரத்து:467கனஅடி நீர்திறப்பு:410கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:55.00/120அடி நீர்வரத்து:151கனஅடி நீர்திறப்பு:356கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:40.46/60அடி நீர்வரத்து:382கனஅடி நீர்திறப்பு:376கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:38.98/90அடி நீர்வரத்து:234கனஅடி நீர்திறப்பு:30கனஅடி

மினி பேருந்து கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

உதகை, ஜூலை 2- குன்னூரில் இயங்கி வரும் மினி பேருந்து களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பல்வேறு கிரா மங்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. குறிப்பாக, 8 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள கிராம மற்றும் நகரப் பகுதிக ளுக்கு குறைந்தபட்ச பயண கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டு, அதன்படியே பய ணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை காரணம் காட்டி, புதனன்று முதல் குன்னூரில் இயக்கப் படும் அனைத்து மினி பேருந்துகளிலும் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள் ளது. இதுதொடர்பாக, பேருந்துகளின் உள் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு, கட்டண உயர்வுக்கான விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ரூ.10 ஆக இருந்த பயணக் கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்த்தப்பட்டு பயணச்சீட்டுகள் வழங் கப்பட்டு வருகின்றன. இதனை ஒரு தரப்பி னர் ஏற்றுக் கொண்டாலும், எவ்வித முன்னறி விப்பும் இன்றி, திடீரென 5 ரூபாய் உயர்த்தப் பட்டிருப்பது தினசரி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.