கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
7 May 2026, 1:58 am

அவசரகால கடன் உத்தரவாத திட்டத்திற்கு வரவேற்பு

திருப்பூர், மே 6- சிறு குறு நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்த நிவாரணம், அவசரகால கடன் உத்தர வாத திட்டம் (இ.சி.எல்.ஜி.எஸ் 5.0) என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தலைவர் ஏ. சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சரவையின் ஒப்பு தலுடன் அறிவிக்கப்பட்ட அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-ஐ ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வர வேற்றுள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. குறு, சிறு மற் றும் நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கிய மான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும். இந்த சவா லான காலகட்டத்தில் உற்பத்தியைத் தக்க வைக்கவும், வேலைகளை பாதுகாக்கவும், விநியோகச் சங்கிலி களை பராமரிக்கவும் இது உதவும். 100 சதகிவிதம் உத் தரவாதம் மற்றும் பூஜ்ஜியக் கட்டணம் ஆகியவை கடன் பெறுவதை மேலும் எளிதாக்கும். இந்த திட்டம், கூடுத லாக ரூ. 2.55 லட்சம் கோடி கடன் ஓட்டத்தை ஏற்படுத்து வதையும், குறுகிய கால பணப்புழக்க சவால்களை சமா ளிக்க வணிகங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்க மாக கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பு, தொழில்துறை யின் மீள்திறனை வலுப்படுத்தி, ஏற்றுமதியில் தொடர்ச் சியை உறுதி செய்யும் என ஏ.இ.பி.சி. நம்பிக்கை தெரி வித்துள்ளது.

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

கோவை, மே 6- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவர், கடந்த 2025 ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த வழக்கு தொடர்பாக தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கார்த்திகேயனுக்கு செவ்வாயன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சனை யில் கார்த்திகேயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பந்தயசாலை காவல் துறையினர் மற்றும் உதவி ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

வீடுகளில் கொள்ளை: இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர், மே 6- திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை களை திருடிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரப்பாளையம் மற்றும் கொடிக்கம்பம் பகுதிகளில் வீடு களின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திரு டிய சம்பவத்தில் மணிகண்டன் (25) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட் டார். திருப்பூர் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் நீதிமன்ற நடுவர் நாதியா பாத்திமா செவ்வாயன்று தீர்ப்பளித்தார். இதில், மணி கண்டனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண் டனை, ரூ.400 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இவ் வழக்கில் அரசு வழக்குரைஞர் ஷெரீன் சித்தாரா ஸ்வீட்டி ஆஜரானார். இதேபோல, திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வழிப் பறியில் ஈடுபட்ட வழக்கில், தனுஷ் லாஸ் (23) என்பவ ருக்கு ஒன்றரை ஆண்டு சிறைக்கண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

திருப்பூர், மே 6- திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி மற் றும் திருப்பூர் வடக்கு, அவிநாசி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர் வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக் கும் நன்றி தெரிவிப்பதாக திமுக திருப்பூர் தெற்குத் தொகுதி வேட்பாளரும், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ந. தினேஷ்குமார் கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலா ளர் உதயநிதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக் களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மக்கள் தேவைகளை அறிந்து செயல்படும் வகையில், தனது பய ணம் தொய்வில்லாமல் தொடரும் என்றும் ந. தினேஷ்குமார் தனது அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

வறட்சியால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

கோவை, மே 6- வால்பாறையில் நிலவும் வறட்சி மற்றும் வறண்டு காணப்படும் நீர்வீழ்ச்சிகளால் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல் கின்றனர். கோவை மாவட்டத்தின் அழகிய மலைப் பகுதியாகவும் “ஏழாவது சொர்க்கம்” எனவும் அழைக்கப்படும் வால்பாறை, இயற்கை வள மும் நீர்வீழ்ச்சிகளும் காரணமாக ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந் தது. குறிப்பாக சின்னக்கல்லார் பகுதி, அதிக மழைப்பொழிவு காரணமாக “தென்னிந்தியா வின் சிரபுஞ்சி” என்றழைக்கப்படுகிறது. ஆனால், சமீப காலமாக நிலவும் வறட்சி காரணமாக அப்பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சிக ளில் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த சுற்று லாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், சட்டமன்றத் தேர் தலுக்குப்பிறகு வால்பாறைக்கு வரும் சுற்று லாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந் துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்க மாக பரபரப்பாக காணப்படும் சுற்றுலாத் தலங்கள், தற்போது வெறிச்சோடிய நிலை யில் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த தால் அப்பகுதியிலுள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவர்களின் வருமானமும் பாதிக்கப் பட்டுள்ளது. வியாபாரம் குறைந்ததால் அவர் கள் கவலையுடன் உள்ளனர். இந்நிலையில், வால்பாறையில் மீண்டும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு, மே 6- ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத் தில் இருப்பு வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக் குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தி யூர் ஆகிய தொகுதிகளுக்கான மின் னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்கு கள் சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளை யம், பவானிசாகர் ஆகிய தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல் லூரியிலும் எண்ணப்பட்டன. மாவட்டத் திலுள்ள 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்காக, 3,532 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2.852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப் பட்டன. இதில் வாக்குச்சாவடி தேவை தவிர கூடுதலாக ஒதுக்கப்பட்ட இயந்தி ரங்களும் மண்டல அலுவலர்கள் வசம் இருந்தது. கடந்த மே 4 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் 8 தொகுதிகளி லும் இயந்திர பழுது, எண்ணிக்கை நிறுத் திவைப்பு போன்ற எந்தப் பிரச்னையும் எழவில்லை. அத்துடன் தபால் வாக்குக ளிலும் பிரச்னைகள் இல்லை. வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வித்தியாசமும் அதிக மாக இருந்ததால் வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் பிரிவு நிறைவு செய்தது. சித்தோடு அரசுப் பொறியி யல் கல்லூரி மற்றும் கோபி கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் மின் னணு வாக்குப் பதிவு இயந்திர பாது காப்பு மைய கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டன. அங்கு ஏற் கெனவே உள்ள போலீஸ் பாதுகாப்பு டன், கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள் ளது.

மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரி, மே 6- ஏரியூர் அருகே மேய்ச்சலுக்கு சென்றிருந்த கால்நடை களை அழைத்துவரும்போது, மின்னல் தாக்கி மூதாட்டி உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி ராதா (65). இவர், செவ்வாயன்று காலை கால்நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச் சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடுதிரும்பும்போது இடி யுடன் கனமழை பெய்தது. அப்போது மழைக்காக வனப்பகுதி யில் உள்ள பாறையின் இடுக்கில் ஒதுங்கியிருந்த ராதா மீது மின்னல் பாய்ந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், ஏரியூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையி னர் ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு

தருமபுரி, மே 6- தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியை சேர்ந்த துரைசாமி (60) என்பவர், பாலக்கோடு வட்டம், ஜக்க சமுத்திரம் பகுதியில் முனுசாமி (71) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று மாலை ஜக்கசமுத் திரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பின்னர், முனுசாமி கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியா மல் மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத் திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, நீண்ட நேர மாக முனுசாமியை காணவில்லை என துரைசாமி தேடிச் சென்றுள்ளார். அப்போது முனுசாமி அங்கு அசைவற்று கிடப்பதை கண்டு பதற்றத்தில் அவரை தொட்டபோது, அவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந் தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலங்கள் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்ப திந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆலோசனை

திருப்பூர், மே 6– கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள் ளும் வழிமுறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தலைமையில் மாவட்ட ஆட்சிய ரகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் உட லின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவை யான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர் எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர் மோர் மற்றும் பழச் சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை, நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாது காப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண் டும். குழந்தைகளுக்கான வழிமுறைகள்: நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட் டுச் செல்லக்கூடாது. பருக இளநீர் போன்ற திரவங் களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப் பம் தொடர்பான நோய்களை கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ் சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். மழலைப் பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல் படுத்த வேண்டாம். முதியவர்களுக்கான வழிமுறைகள்: தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள் ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். வெப்ப அழுத் தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டு களால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளையில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். 100 நாள் பணியின் போது நண்பகல் 12.00 மணிக்கு மேல் பணி செய்யாமல் இருப்பது போன்ற வையும் ஆகும். கால்நடைகளுக்கான வழிமுறைகள்: கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால் நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடை களை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்க ளில் வாகனங்களில் தனியே விட்டு செல்லக் கூடாது. மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிக மாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி மின்கசிவு ஏற்பட்டு அத னால் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேற்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட் டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்பு சூடாகி மின் விசிறி, டியூப்லைட் போன்றவை கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை முடியும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன்; விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசி யம் என ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார். இக்கூட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மனோன்மணி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

வாக்காளர்களுக்கு மதிவேந்தன் நன்றி

வாக்காளர்களுக்கு மதிவேந்தன் நன்றி நாமக்கல், மே 6- ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பா ளரும், அமைச்சருமான மதிவேந்தன் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவிந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத் தில், 2021 இல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக வும், அமைச்சராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங் கிய ராசிபுரம் தொகுதி மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றி. மேலும், திராவிட மாடல் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில், ராசிபுரம் தொகுதி மக்களுக்காக கூட் டுக்குடிநீர் திட்டம், மாவட்ட தலைமை மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, புறநகர் பேரூந்து நிலையம், விளையாட்டு அரங்கம், போதமலை சாலை போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் பறிப்பு: இருவர் கைது

கோவை, மே 6- கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், மகாத்மா காந்தி சாலை ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்றார். அப் போது அங்கு வந்த 2 வாலிபர்கள், அவரிடமிருந்த செல் போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். உடனே ராம்குமார் சுதாரித்து கொண்டு அவர்களை விரட்டினார். அப்போது அங் கிருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர். பொதுமக்கள் துரத்தலுக்கு பயந்து தப்பி ஓடிய வாலிபர்கள் 2 பேரும் கீழே விழுந்தனர். உடனே அந்த 2 பேரையும் பொது மக்கள் பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர். விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன் (28) ஆகி யோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து, போலீசார் 2 பேரையும் கைது செய்து, செல் போனை பறிமுதல் செய்தனர்.

குப்பை கொட்டியதை தட்டிக்கேட்ட மூதாட்டி கொலை

கோவை, மே 6- காருண்யா நகர் பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பான தகராறில். மூதாட் டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், நல்லூர்வயல், சப் பாணிமடை பகுதியை சேர்ந்தவர் ஜெசி (72). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் நோபிள் வாட்சன் (47) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக நீண்ட நாட்களாகவே முன்விரோ தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதனன்று காலை தனது வீட்டின் முன்பு குப்பை கொட்டியது தொடர் பாக ஜெசியிடம் நோபிள் வாட்சன் வாக்குவா தத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திர மடைந்த நோபிள் வாட்சன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெசியின் கழுத் தில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெசி, சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல றிந்து வந்த காருண்யா நகர் காவல் துறையி னர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி யோட முயன்ற நோபிள் வாட்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

மழையால் உதகை விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, மே 6- உதகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை கோடை மழைப்பொழிவு காலமாகும். ஏப்ரல் மாதம் இறுதி வரை கோடை மழை பொய்த்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. மலைக்காய்கறி விதைப்பு பணி பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஆங்காங்கே காட்டுத்தீ பரவலால் வனப்பகுதிகள் எரிந்து பாதிக்கப்பட்டது. வெப்பநிலை அதிகபட்ச மாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவானத் தால், சுட்டெரிக்கும் வெயிலுக்கு பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வார மாக உதகை உட்பட சுற்றுவட்டார பகுதிக ளில் மிதமானது முதல் கனமழை பெய்து வரு கிறது. அவ்வப்போது பெய்து வரும் மழை யால் மலைக்காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர, வனத்தீ அபாயம் குறைவதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

மே 8 முதல் 3 நாட்களுக்கு நாய்கள் கண்காட்சி

உதகை, மே 6- கோடை சீசனையொட்டி, உதகையில் மே 8, 9, 10 ஆகிய 3 நாட்கள் தேசிய அளவி லான நாய்கள் கண்காட்சி நடைபெறும் என தென்னிந்திய கெனல் கிளப் அறிவித்துள் ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப் ரல், மே மாதங்களால் கோடை சீசன் காலமா கும். அப்போது இங்கு நிலவும் இதமான கால நிலையில் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல் வேறு கண்காட்சிகளுடன் கோடை விழா நடத் தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவிலான நாய்கள் கண் காட்சி நடத்தபட்டு வருகிறது. அதன்படி, நடப் பாண்டிற்கான தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி மே 8 ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக தென்னிந்திய கெனல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி தெரி வித்துள்ளார். உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் 104 ஆம் ஆண்டு பீகில் மற்றும் இந்திய வகை நாய்களுக்கான கீழ்படிதல், ஸ்பெசாலிட்டி ஷோ ஆகியவை நடைபெறும் என்றும், அதில் 40 முதல் 50 வகையான பீகில் மற்றும் இந்திய வகை நாய்கள் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து மே 9, 10 ஆகிய 2 நாட்கள் 137 மற்றும் 138 ஆம் ஆண்டு அனைத்துவகை நாய்களுக் கான போட்டிகள் நடைபெறும் என்றும், அதில் 55 வாகையான 435 நாய்கள் பங்கேற்க உள் ளன. போட்டிகளை கண்காணிக்க ஆஸ்தி ரேலியா, கஜகஸ்தான் நாடுகளை சேர்ந்த 2 நடுவர்கள் வர உள்ளதாகவும் அவர் தெரிவித் தார்.

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

உதகை, மே 6- குன்னூர் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற் கொண்டு, ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 25 கிலோ மாம்பழங் களை பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மார்க் கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகை யில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப் பட்ட பழங்கள் மற்றும் தரம் குறைந்த மீன் கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து பழக்கடை களிலும் தீவிரமாக சோதனை செய்யப் பட்டது. தற்போது மாம்பழ சீசன் தொடங் கியுள்ளதால், மாம்பழங்களை செயற்கை முறையில் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகி றதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சில கடை களில் விதிமுறைகளை மீறி ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 25 கிலோ விற்கும் மேற்பட்ட மாம்பழங்களை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட நான்கு பழக்கடை களுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மீன் கடைகளிலும் அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். இந்த ஆய்வின் போது, ஒரு கடையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த அழு கிய மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக அங் கிருந்த அழுகிய மீன்களை அதிகாரி கள் பறிமுதல் செய்து, அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்த அந்த கடை உரிமை யாளருக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, முதற்கட்டமாக 1,000 ரூபாய் அபராத மும் விதிக்கப்பட்டது.