கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
yesterday

கொலை முயற்சி வழக்கு: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

கோவை, ஜூன் 22- கோவையில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை பெற்ற இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலா ளர் சூர்ய பிரசாத் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சூர்ய பிரசாத்திற்கு கோவை மாவட்ட கூடு தல் அமர்வு நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, சூர்ய பிரசாத்தை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனடிப்படை யில், கோவை பந்தயசாலை காவல்துறையினர் அவரை திங்க ளன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

6 வயது சிறுவன் அடித்துக்கொலை தாய்க்கு ஆயுள்; நண்பருக்கு இரட்டை ஆயுள்

கோவை, ஜூன் 22- கோவையில் 6 வயது சிறுவனை அடித்துக்கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, வடவள்ளியை சேர்ந்த அருண் - திவ்யா தம்பதி யினருக்கு அபிஷேக் (6) மற்றும் ஹிர்சினி (3) ஆகிய குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், திவ்யா கணவரை பிரிந்து சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது, தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜதுரை (35) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்.19 ஆம் தேதியன்று, திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவரும் சிறுவன் அபிஷேக்கை கொடூரமாக தாக்கியுள் ளனர். இதில் மயங்கி விழுந்த அபிஷேக்கை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறு வன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். விசாரணையில் சிறு வன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச் சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலணி போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜதுரை மற்றும் திவ்யா ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இருவரும் குற்றவாளி கள் என கடந்த 2 நாட்களுக்கு முன் நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்நிலையில் தண்டனை விபரங்கள் திங்களன்று அறிவிக்கப் பட்டது. அதில், முதல் குற்றவாளியான ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் மற்றும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை யும், சிறுவனின் தாய் திவ்யாவிற்கு ஒரு ஆயுள் மற்றும் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விவேகா னந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேருந்து வசதி கோரி மாணவர்கள் மனு

திருப்பூர், ஜூன் 22- பள்ளிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என மாணவர்கள், பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த பாலசமுத்தி ரம் ஊராட்சிக்குட்பட்ட எட்டு கிராமங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், தம்மரெட்டி பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்க ளுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. பேருந்தை பிடிக்க ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல தம்மரெட்டி பாளையம் பகுதியில் இறங்கி மீண்டும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடந்தே சென்று பள்ளிக்கு போக வேண்டியுள்ளது. காலை, மாலை என பேருந்துக்காக மாணவர்கள் மிகவும் சிரமப்படும் சூழலில் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர்.

சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 22- தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி நிறைவேறாததால், 15க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பாதிப்படைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவிற்குட்ட 46.புதூர் ஊராட்சிக்கு, ஈரோடு - பூந்துறை சாலையின் ஈபி நகர் வாய்க்கால்மேடு பிரிவிலிருந்து இணைப்பு சாலை உள்ளது. இதனைப்புதுப்பிக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், முழுமையடையவில்லை. காமராஜ் நகர், ஈபி நகர் தெற்கு, ஈபி நகர், ராம் நகர், செந்தூர் கார்டன், கேஏஎஸ் நகர், காந்திஜி வீதி, கரும்பாறை உள் ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும். இங்கு சுமார் 1000 வீடுகள் உள்ளன. கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பணிகள் முழுமையடையா ததால், இவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி ஏற்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை. எனவே, தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

காலமானார்

கோவை, ஜூன் 22- மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றி வந்த தோழர் பி.ஆறுமுகம் காலமானார். கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், ஜே.ஜே.நகர் கிளையின் செயலாளராக தோழர் பி.ஆறுமுகம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திங்களன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உட லுக்கு, மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், வி.இராமமூர்த்தி, மதுக்கரை ஒன்றியச் செயலாளர் பஞ்ச லிங்கம் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பணம் வழங்க பயனாளிகள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர், ஜூன் 22- திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் ஒரு தவணை கூட பணம் வழங்கவில்லை. கட்டப்பட்ட வீடு கள் பாதியிலேயே நிற்பதால் மன உளைச்சல் ஏற்பட்டுள் ளது. எனவே திட்டத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பட்டா இடத்தில் காங்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ரூ. 3.50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 80க்கும் மேற்பட்டோர் கிராமப் புறங்களில் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டிக்கொள்ள பணி ஆணை மற்றும் நிர்வாக அனுமதி கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்டது. வீடுகள் தொடர்ந்து கட்டப்பட்டு முடிவடை யும் தருவாயில் கூட இதுவரையில் ஒரு தவணை மானிய தொகை கூட வழங்கப்படவில்லை. இதனால் ஏற்படும் கால தாமதம் காரணமாக அதிகபட்ச மின் கட்டணம் செலுத்து வதுடன் மன உளைச்சல் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு உடனடியாக மானிய தொகையை விடுவித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர்.

பொறுப்பேற்பு உதகை,

ஜூன் 22- நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவல ராக சு.பாலாஜி பொறுப்பேற் றார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவல ராக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த சையத் முகம்மத், கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மாற் றப்பட்டார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவல ராக பணியாற்றி வந்த சு. பாலாஜி, நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மாற்றப்பட் டார். இந்நிலையில், திங்க ளன்று பொறுப்பேற்றுக் கொண்ட சு.பாலாஜிக்கு, ஆட்சியர் லட்சுமி பவ்யா தண் ணீரு உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சாலையில் வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

உதகை, ஜூன் 22- உதகையில் பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற் றுப்பகுதிகளில் திங்களன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கூட லூர், மைசூரு செல்லக் கூடிய சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியதால், வாகனங்கள் ஊர்ந்துவாறு சென்றன. இதேபோல் ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்ற பொதுமக் கள் அச்சத்துடன் தண்ணீரை கடந்து சென்றனர். இடியுடன் கூடிய கனமழையால் கடும் குளிர் நிலவுவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வீடுகளை இடிக்க எதிர்ப்பு: மக்கள் மறியல்

திருப்பூர், ஜூன் 22- வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜனசக்தி நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 165 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்த குடும்பங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த மக்க ளுக்கு பட்டா வழங்குவதற்கு முன்பு நிலத்தின் உரிமையாளரின் மகன் அந்த நில பத்தி ரத்தை வைத்து தனியாரிடம் அடமான கடன் பெற்றுள்ளார். கடன் தொகை செலுத்த முடி யாத சூழலில் கடன் கொடுத்தவர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை உரிமை கோரியுள்ளார். இச்சூழலில் நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. இந்த தீர்ப்பின் அடிப்படை யில் இடத்தை காலி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்டவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்த இடத்தை அப்புறப்படுத்தி தனிநபருக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளித்து வந்துள்ளனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், திங்க ளன்று போலீசார் பாதுகாப்புடன் வீடுகள் இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த பொதுமக்கள் திருப்பூர் - தாராபுரம் சாலை, செட்டிபாளையம் பகுதியில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த போலீசார் பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்ற தால் இருதரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.