கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
29 May 2026, 11:05 pm

13 வருடமாக அலைக்கழிக்கப்படும் விவசாயி!

திருப்பூர், மே 29 - கூட்டுறவு நகர வங்கியில், கடன் தொகையை முழுமை யாக திருப்பிச் செலுத்திய பிறகும் நிலத்தின் மீதான அட மான ரத்து சான்றிதழையும், அசல் பத்திரங்களையும் தராமல் முதியவர் ஒருவரை வங்கி நிர்வாகம் 13 ஆண்டுகளுக்கும் மேலாக அலையவிட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. திருப்பூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டு தனது நில பத்திரங்களை அடமானமாக வைத்து கூட்டுறவு நகர வங்கியில் முதன் முதலில் கடன் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டிற்குள் மூன்று அடமானக் கடன்கள் மூலம் பெற்ற மொத்தம் 5 லட்சம் ரூபாய் தொகையையும், வட்டித்தொகையையும் முழுமையாக கட்டி முடித்துவிட்டார். கடன் முடிந்து பல ஆண்டுகள் ஆகி யும் அசல் பத்திரங்களை தராமல் இழுத்தடித்த வங்கி நிர்வா கம், கடந்த 2025-ல்தான் அசல் பத்திரங்களை அவரிடம் ஒப்ப டைத்துள்ளது. ஆனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் வங்கியின் பெயர் நீங்குவதற்கான அடமானக் கடன் ரத்து சான்றை வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் இதுகுறித்து வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரன் என்பவரை அணுகியபோது, பத்திரங் களை ரத்து செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்ச மாக தர வேண்டும் எனக்கூறி 6,600 ரூபாய் பணம் கேட்டுள் ளார். ஆனால், சட்டப்படியான கட்டணம் மிகக் குறைவு என் பதை அறிந்த விஜயகுமார் லஞ்சம் தர மறுத்து, ஆதாரங்களு டன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பி னார். ஆர்பிஐ விசாரணையை தொடர்ந்து, கூட்டுறவு வங்கி நிர்வாகம் உடனடியாக தனது நிலையை மாற்றிக்கொண்டு, வங்கியின் சட்டப்படியான கட்டணமான 300 ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு ரத்து செய்வதற்கான ஆவணங்களை வழங்கியது. ஆவணங்கள் கிடைத்த பிறகும், கூட்டுறவு வங்கி யின் மேலாளர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திட மறுத்து முதியவரை அலைக்கழித்து வருவ தாக கூறப்படுகிறது. 2024 அக்டோபர் முதலே இதற்காகப் போராடி வரும் விவசாயி விஜயகுமார், வங்கிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள் ளார்.

கோவையில் இயந்திரவியல் கண்காட்சி!

கோவை, மே 29– கோவையில் கொடிசியா தொழில் அமைப்பு சார்பில், ’இன்டெக் 2026’ என்ற சர்வதேச இயந்திரம் மற்றும் பொறி யியல் தொழில் கண்காட்சி ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்தி கேயன், இன்டெக் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், இந்த சர்வதேச கண்காட்சியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, தைவான், சீனா, கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் பங்கேற்கின்றன. நாட்டின் 13 மாநி லங்களை சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இதற்காக 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அதிநவீன இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள் ளன. புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக் கில், சிறப்புக் கருத்தரங்கம் ஜூன் 5 ஆம் தேதி ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கல்குவாரியை மூடக்கோரி தர்ணா; 50 பேர் கைது!

நாமக்கல், மே 29- திருச்செங்கோடு வட்டம், அக்கலாம்பட் டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரி யால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, வெடி அதிர்வுகளால் வீடுகள் சேதமடைந்து, விவசா யமும் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடடிவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இப் பாதிப்பு குறித்து மனு அளிக்க முயன்ற பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அக்கலாம்பட்டி கிராம மக்களும், விவசாய சங்கத்தினரும் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந் ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை நல்லி பாளையம் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்ட னர்.

பத்திரப்பதிவு துறையில் காலியிடங்கள் நிரப்பப்படும்!

நாமக்கல், மே 29- தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்தி ரப்பதிவு துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். நாமக்கல் நகருக்கு வருகை தந்த அமைச் சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு, ஆட்சி யர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விருந்தி னர் இல்லத்தில் ஆட்சியர் துர்கா மூர்த்தி, எஸ்பி சு.விமலா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு துறையில் காலியாக உள்ள பணியிடங் கள் குறித்து விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை இருப்பது அரசின் கவனத் திற்கு வந்துள்ளது. அதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 6 மாதங்களில் முழு மையான ஆன்லைன் பதிவு முறை அமலுக்கு வரும், என்றார்.

சிறுத்தையின் உடல் மீட்பு

உதகை, மே 29- நீலகிரி மாவட்டம், கூட லூர் வனச்சரகம், சில்வர்கிள வுட் பகுதியில் வன ஊழியர் கள் வியாழனன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுத்தை இறந்து கிடப்பதை அறிந்து உயரதி காரிகளுக்கு தகவல் அளித்த னர். அதன்பேரில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்து வர் ராஜேஷ்குமாரை வரவ ழைத்து உடற்கூறாய்வு மேற் கொண்டனர். ஆய்வக பரிசோ தனைக்காக முக்கிய உறுப்பு களை எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அதன் உடலை எரியூட்டினர். இது தொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, இறந்தது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையாகும். ஆய்வக அறிக்கை வந்தவு டன்தான் அதன் இறப்புக் கான காரணம் தெரிய வரும், என்றனர்.

உறைவிந்து உற்பத்தி நிலையத்தில் ஆய்வு

உதகை, மே 29- உதகை, தீட்டுக்கல் பகுதியிலுள்ள உறைவிந்து உற்பத்தி நிலையத்தில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் ஆய்வகம் உள்ளது. இங்கு பொலி காளை களில் இருந்து உறைவிந்து உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படு கிறது. மேலும், இங்குள்ள ஆய்வகத்தில் பல்வேறு சோதனை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆய்வகத்தில் வெள்ளியன்று தமிழக கால்நடை பராமரிப்புத் துறை கமலி ஆய்வு மேற்கொண்டார். கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், உறைவிந்து உற்பத்தி ஆகியவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

80 அடி சாலை நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தல்!

ஈரோடு, மே 29- ஈரோட்டில் 80 அடி சாலை ஆக்கிரமிப்பை அகற்ற தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு இரயில் நிலையத்தை யும், மீனாட்சிசுந்தரனார் சாலையையும், மேட்டூர் ரோடு மற்றும் காந்திஜி ரோடு ஆகிய முக்கிய சாலைகளுடன் இணைக்கும் வகையில் 80 அடி சாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு சிஎஸ்ஐ நிர்வாகம் தெரிவித்த ஆட்சேபணைகள் உள்ளூர் திட்டக் குழுமத்தால் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, பெரியார் நகர் பகுதி யில் இத்திட்டத்திற்கான 80 அடி சாலை ஏற்கனவே அமைக்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது, ரயில் நிலையச் சாலையில் உள்ள சவானா கார்டன் மற்றும் சண்டிகா தியேட்டர் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்த திட்டச்சாலை முழுமை யடைந்து இணைய வேண்டும். ஆனால், அந்த இடத்தின் புதிய உரிமையாளர் அங்குள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய பிரம்மாண்ட வணிக வளாகம் ஒன்றைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அங்கு புதிய வணிக வளாகம் அமைந்துவிட்டால், ஈரோடு மக்க ளின் நீண்ட நாள் கனவான 80 அடி சாலைத் திட்டம் முற்றி லும் முடங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலை அமையவுள்ள அந்த குறிப்பிட்ட இடத்தில் புதிய வணிக வளாகம் அல்லது கட்டடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது. திட்டச் சாலைக்கு தேவையான நிலத்தை அரசு உடனடியாக கையகப்படுத்த வேண்டும். 80 அடி சாலைத் திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஈரோட்டின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீடு நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் மனு

உதகை, மே 29- விபத்துக்குள்ளாகும் தொழிலாளர்க ளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை பாதுகாப்பு நிலைக்குழுவினரிடம், அருவங் காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிற் சங்கத்தினர் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த மக் களவை பாதுகாப்பு நிலைக்குழுவினர், குன் னூர் ராணுவப் பயிற்சி கல்லூரி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர் அமைப்புகளுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, இக்குழுவினரிடம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சங்கத்தினர் மனு ஒன்றை வழங்கினர். அதில், இங்குள்ள தொழிலாளர் களுக்கு மலைப்பகுதிப்படி வழங்க வேண் டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படையிலான பணி வழங்கு வது தொடர்பாக விரைந்து பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட் டத்தை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியை சீர மைத்து, அதை பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியாக மாற்றிய மைக்க வேண்டும். பணியின்போது விபத் துக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கு போது மான மற்றும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. அம் மனுவை பெற்றுக்கொண்ட நிலைக்குழு உறுப்பினர் தொல்.திருமாவளவன் எம்.பி., பாதுகாப்புத்துறை அமைச்சரின் கவனத் துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சிப்காட்டில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தீவிரம்

தருமபுரி, மே 29- தருமபுரி சிப்காட்டில் சாலைகள், மழைநீர் கால்வாய், நடைபாதை உள்ளிட்ட அடிப் படை கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கடந்த 1965 இல் சேலத்திலிருந்து தனி மாவட்டமாக உதயமான தருமபுரி மாவட் டத்தில் சிப்காட் அமைக்கப்படவில்லை. இத னால் இங்குள்ளவர்கள், வேலை தேடி வெளி யூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, சிப்காட் அமைப்பதற்காக தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை, தடங்கம், பால ஜங்கமனஹள்ளி, அதகபாடி ஆகிய ஊராட்சி களில், அரசு புறம்போக்கு மற்றும் விவசாய நிலம் என 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. இந்த பணி முடிந்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சேலம் - தருமபுரி நான்கு வழிச்சாலையில், முதற்கட்டமாக ரூ.17 கோடியில் 1.3 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, சிப்காட் முதல் தொகுதி ரூ.66.76 கோடி மதிப்பில் சாலை கள், கால்வாய், மழைநீர் கால்வாய், நடை பாதை உள்ளிட்டவை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணிகள் வரும் ஜூன் 17 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலத்திற் குள் சிப்காட் பேஸ் 1 இல் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகி றது.

போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, மே 29- ஈரோடு மாவட்டம், தாள வாடியை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண் டது. இவ்வழியாக சத்திய மங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், தமிழக - கர்நாடக மாநிலங் களிடையே தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலை யில், கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் இருந்து கோவை நோக்கி பார்சல் ஏற்றி வந்த சரக்கு லாரி, 11 ஆவது கொண்டை ஊசி வளைவு தடுப்புச்சுவரில் மோதி பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திம்பம், ஆசனூர் பாதை யில் வாகனங்கள் அணிவ குத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆசனூர் காவல் துறையினர், பழு தாகி நின்ற லாரியை அப் புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின.

கால்வாய்களாக மாறிய மழைநீர் வடிகால்கள்!

உடுமலை, மே 29- உடுமலை நகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால் வாய்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடு களின் கழிவுநீர் விடப்படுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியின் 33 வார்டுகளிலும் சுமார் 80ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை ஓரங்களில் மழைநீர் வடி கால்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவை முறையாக பராமரிக்கப்படாததா லும், பாதாளச் சாக்கடை திட்ட குளறுபடி களாலும் தற்போது சாக்கடைத் தொட்டியாக மாறியுள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர் கள் கூறுகையில், கடந்த 2013-இல் 56.07 கோடி ரூபாய் மதிப்பில் 97 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப் பட்டு, ஏரிப்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலை யமும் அமைக்கப்பட்டது. ஆனால், இத் திட்டத்தின் குளறுபடிகளால், இன்றும் பெரும் பாலான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளின் கழிவுநீர் மழைநீர் வடிகாலிலேயே நேரடி யாக திறக்கப்படுகிறது. இதனால் பாதாளச் சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது, என்றனர். எனவே, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, வடிகால் களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தருமபுரி, மே 29- தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், விபத்து களை குறைக்கவும் காவல் துறை சார்பில், அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாலக்கோடு ஆகிய 3 வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு தின மும் சராசரியாக 50 முதல் 200 புதிய வாகனங் கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் வாகனங்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக சுமார் 10 லட்சம் அதிகரித்துள் ளன. வாகனங்கள் பெருகிய அதே வேளை யில், போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. தலைக்கவசம் அணியாதது, வேகமாக செல்வது போன்ற விதிமுறை மீறல்கள் தருமபுரியில் அதிகரித் துள்ளன. போக்குவரத்து போலீசாரின் பற் றாக்குறையை சமாளிக்கவும், விதிமீறல் களை கட்டுப்படுத்தவும் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் இந்தத் தானியங்கி கேமராக் கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த கேம ராக்கள் மூலம் வாகன ஓட்டிகள் தலைக்கவ சம் அணியாமல் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து விதிகளை மீறி னாலோ, உடனடியாக வாகனத்தின் பதிவு எண், விதிமீறல் நடந்த தேதி மற்றும் நேரத்து டன் துல்லியமாக படம் பிடிக்கப்படும். இந்த தகவல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, வாகன உரிமையாளரின் முக வரிக்கு தபால் மூலமாகவோ அல்லது அவ ரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூல மாகவோ அபராத நோட்டீஸ் உடனடியாக அனுப்பப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதத் தொகையை செலுத்தத் தவறி னால், நீதிமன்றம் மூலமாக அடுத்தகட்ட கடு மையான சட்ட நடவடிக்கைகள் பாயும். தற் போது முதல்கட்டமாக தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் 4 கேமராக்கள் பொருத் தப்பட்டு, போக்குவரத்து புறக்காவல் நிலை யத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம் கிருஷ்ணகிரி மார்க்கம், குமாரசாமிப்பேட்டை சாலை மற் றும் பெரியார் சிலை செல்லும் பாதைகள் கண் காணிக்கப்படுகின்றன. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்பட மேலும் 6 முக்கிய இடங்களில் 12 புதிய கேம ராக்கள் பொருத்தப்பட உள்ளன.