தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Jul 2026, 1:45 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நில மதிப்பை குறைத்து பட்டா வழங்க கே.சுப்பராயன் எம்பி., கடிதம்

திருப்பூர், ஜூலை 1- திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டையார் நகர் குடியி ருப்பில் 192 குடும்பங்களுக்கு கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய 6 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 268 வசூலிப்பது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட வேலை செய்து பிழைத்து வரும் ஏழை எளிய மக்கள் இந்த மிகப்பெரும் தொகையை செலுத்த முடியாது என்பதால் நில மதிப்பில் 60 சதவிகிதம் குறைத்து நிர்ண யித்து மேற்படி 192 குடும்பத்தாருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று திருப்பூர் எம்பி கே.சுப்பராயன், தமிழக முதலமைச் சர் ச.ஜோசப் விஜய்க்கு செவ்வாயன்று கடிதம் எழுதியுள் ளார். அக்கடிதத்தில், கடந்த 2000 ஆம் ஆண்டு தான் எம்எல்ஏ வாக இருந்தபோது அப்போதைய அரசு 75 குடியிருப்புதாரர்க ளுக்கு தலா ரூபாய் 900 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு பட்டா வழங்கியது. அந்த இடம் பூமிதான நிலம் என்பதால் ஏற்கனவே பட்டா பெற்ற நபர்களிடம் பட்டாவை ரத்து செய்திருக்க வேண்டும். அவர்களது பட்டாவை ரத்து செய்யாமல் பயனாளிகளுக்கு பட்டா வழங்கியதால், இது செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மாநில அரசின் நிர்வாக தவறால் பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே தற்போது அரசு நிர்ணயத்திற்கும் அபரிமித மான நில கிரைய மதிப்பு ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். எனவே, முந்தைய மாநில அரசு குறைந்த நில மதிப்புத் தொகையை நிர்ணயித்தது போல, தற்போது குறிப்பிடப்பட்டுள்ள நில மதிப்பை 60 சதவீதம் குறைத்து நிர்ண யித்து 192 குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கிணற்றை மூட ஜமாபந்தியில் மனு

நாமக்கல், ஜூலை 1- காட்டுவேலாம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஆழமான கிணற்றை மூடுமாறு ஊர் பொதுமக்கள் திருச்செங்கோடு ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அதிகாரி யிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள இறை யமங்கலம் காட்டு வேலம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் திடீ ரென சிலர் ஆழமான மற்றும் அகலமான கிணறு வெட்டப்பட்டு அதிலிருந்து குழாய்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லும் பணியை செய்தனர். அப்போது வைக்கப் பட்ட வெடிகள் காரணமாக காட்டு வேலாம் பாளையத்தில் இருந்த வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்களின் சாலை மறியல் போன்ற போராட்டங்க ளால் அப் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணி கள் நடைபெற்று வருவதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதனால் ஊருக்குள் இருந்த கிணறுகள், போர் வெல் கிணறுகள் போன்றவற்றில் நீர் வற்றி போகும் நிலை உள் ளது. இதே நிலை நீடித்தால் சுமார் 300 குடும்பங்களும் ஊரை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே இந்த கிணற்றை மூட வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோட் டில் செவ்வாயன்று நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

வழக்கமான இடத்திலேயே குதிரை சந்தை நடைபெறும்!

ஈரோடு, ஜூலை 1- அந்தியூரில் கோவில் திருவிழாவை முன் னிட்டு, நான்கு நாட்கள் குதிரை சந்தை வழக்க மான இடத்திலேயே நடைபெறும் என பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழா ஆக.12 ஆம் தேதி யன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற வுள்ளது. இவ்விழாவையொட்டி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குதிரைகள் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் கொண்டு வரப்படும். இந்நிலையில், விழாக்காலத்தில் மழை பெய்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்ப டுவதால் குதிரை சந்தையை, வேறு இடத் திற்கு மாற்ற வேண்டும் என குதிரை வளர்ப் போர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி யினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இடமாற்றம் செய்தால் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் பி.ஹரிபாஸ்கர் முன் னிலையில், கோவில் வளாகத்தில் செவ்வா யன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வழக்கம்போல கொன்னமரத்தை யன் கோவிலுக்கு செல்லும் வழியில் குதிரை சந்தை கூடுவது எனவும், குதிரை உரிமையா ளர்களுக்கு கொட்டகை அமைத்தல், வாகன நிறுத்தும் வசதிகள் உள்ளிட்ட கூடுதல் வசதிக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என வும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு குதிரை வளர்ப்போர் சங்கத்தினர் ஒப்புக் கொண்டதால், கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

பேச மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் தந்தை தட்டிக்கேட்டதால் வீட்டை சூறையாடிய கும்பல்

கோவை, ஜூலை 1- மதுக்கரை அருகே பேச மறுத்ததற்காக மாணவியை இளைஞர் தாக்கிய நிலையில், அதை தந்தை தட்டிக்கேட்டதை தொடர்ந்து ஒரு கும்பல் வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண், தனி யார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகி றார். அந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் பேசி வந்த தாக தெரிகிறது. ஆனால், அவர் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால், மாணவி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாயன்று கல்லூரி முடிந்து வந்த மாணவியை சூர்யா தாக்கி யுள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை சூர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதை யடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோ ருடன் போத்தனூரில் உள்ள அனைத்து மக ளிர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், மதுக்கரை காவல் நிலையத்திற்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் மதுக்கரை காவல் நிலையத்திற்கு சென்று காத்திருந்த போது, இளைஞர்கள் சிலர் சிவக்குமாரிடன் வீட்டை உடைத்து சூறையாடியுள்ளனர். மேலும், பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.1.5 லட்சம் மற்றும் நகை மாயமானது. இதைய டுத்து மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

மின்தடையால் விசைத்தறி, விவசாயம் முடக்கம்!

அவிநாசி, ஜூலை 1- அவிநாசி அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து நான்கு நாட்களாகியும் இதுவரை சீரமைக்கப்படாததால், விசைத் தறி மற்றும் விவசாயத் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப் பள்ளன. அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருவலூர் ஊராட்சி, அனந்தகிரி–இராமநாதபுரம் செல்லும் சாலையில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென வெடித்தது. இதனால், அப்பகுதிக்கான மும்முனை மின்விநியோகம் (Three-phase power supply) முற்றிலு மாக துண்டிக்கப்பட்டு, தற்போது தற்காலிகமாக சிங்கிள் பேஸ் (Single-phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வரு கிறது. இதன் காரணமாக, அனந்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகு திகளில் இயங்கி வரும் விசைத்தறிக்கூடங்கள் முற்றிலும் இயங்காமல் முடங்கியுள்ளன. மேலும், போதிய மின்சாரம் இல்லாததால் விவசாய மின் மோட்டார்களையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத்தறித் தொழி லாளர்களும், விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நம்பியம்பாளையம் மின்வாரிய அலுவல கத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப் பில் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தனர். ஆனால், பழுதை சரிசெய்ய மின்வாரியத்தினர் எந்தவித தொடக்கக் கட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய உயர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைத்து, விசைத்தறி மற்றும் விவ சாயத்திற்கு தேவையான மும்முனை மின் விநியோகத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.2.90 கோடியில் சாலைகள் சீரமைப்பு

உதகை, ஜூலை 1- உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூலக வரியின் கீழ், ரூ.2.90 கோடி மதிப்பீட் டில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின் றன. நீலகிரி, மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான சாலைகள் குறுகலாகவும், அதேசமயம் மலைப்பாங்கான மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அமைந்துள் ளன. இங்கு ஆண்டிற்கு ஆறு மாதத்திற்கு மேல் மழைப்பொழிவு காணப்படும் நிலை யில், மலைப்பாங்கான பகுதிகளில் சாலை தர மான முறையில் அமைத்தாலும், அடிக்கடி பழுதடைகிறது. சமவெளிப் பகுதிகளை காட்டிலும், இங்குள்ள சாலைகளின் ஆயுட் காலம் குறைந்தே காணப்படுகிறது. குறிப் பாக, உதகையில் எப்போதும் மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் தண்ணீர் ஓடி யும், தேங்கியும் நிற்பதால், சாலைகள் அடிக் கடி பழுதடைகின்றன. இதனால், அடிக்கடி சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. இந்நிலையில், உதகை நகராட்சி, 36 வார்டுகளிலுள்ள சாலைகளில் பெரும் பாலான சாலைகள் பழுதடைந்து சில ஆண்டு கள் ஆன நிலையில், இச்சாலைகளை சீர மைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த னர். இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பழுதடைந்த சாலைகளை ஆய்வு செய்து, இச்சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அவ்வப்போது கடிதங்களை அனுப்பி வந்தது. இந்நிலை யில், நூலக வரியின் கீழ் ரூ.2.90 கோடி செலவில், மேட்டுச்சேரி, வால்சம் சாலை மற் றும் மிஷினரிஹில் சாலை உள்ளிட்டவற்றை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் சீராகியுள்ளதால், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.