தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

19 Jun 2026, 12:06 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரேசன் கடையை சேதப்படுத்தி யானை

உதகை, ஜூன் 18- மசினகுடி கிராமத்திலுள்ள ரேசன் கடையை சேதப்படுத்திய யானை, அங்கிருந்த அரிசி மூட் டையை எடுத்து சாப்பிட்டும் சேதப்படுத்தியும் சென்ற தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்ப கத்திற்குட்பட்ட மசினகுடி கிராமப் பகுதியில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் உணவு தேடி யானை கள் உலா வருகின்றன. இந்நிலையில், புதனன்று இரவு மசினி அம்மன் கோவில் அருகே உள்ள ரேசன் கடையை உடைத்த யானை, அரிசி மூட்டை களை வெளியே இழுத்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சைரன் ஒலி எழுப்பும் வாகனத்து டன் யானையை விரட்டினர். அப்போது சாக்குப் பையுடன் அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்த யானை, அங்கிருந்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரத் திற்கு மேலாக அதேபகுதியில் சுற்றுத்திரிந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழைத் தோட்டம் கிராமப்பகுதியில் ரேசன் கடையை சேதப் படுத்திய யானை, இதே போல் அரிசி மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடியது. இச்சம்பவத்தால் அப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடன டியாக வனத்துறையினர் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை துவக்கம்

கோபி, ஜூன் 18- கோபிசெட்டிபாளையம் அருகே 5 ஆண்டுக ளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப் பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குனி, சமத்துவபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற குக்கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள், குருமந்தூர் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதுதவிர வெளியூர் வேலைக்கு செல்வோர் குருமந்தூர் வழியாக சென்று வருகின்றனர். இதனிடையே, தாழ்குனி வழியாக குறித்த நேரத்துக்கு மட்டுமே ஒரு சில பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கோபியிலி ருந்து குருமந்தூர் வழியாக பள்ளி நேரத்துக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தாழ்குனி வழியாக இயக் கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டதால், பள்ளி நேரத்துக்கு செல்லும் மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்வோர் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனி டம் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில், கோபி முதல் கொளப்பலூர், தாழ்குனி வழியாக சத்தி யமங்கலத்துக்கு அரசுப் பேருந்து சேவை புதனன்று தொடங்கப்பட்டது.

கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, ஜூன் 18- உதகையில் பெய்த கனமழையால், மலை காய் கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்தி ருந்த நிலையில், வியாழனன்று உதகையில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மழை யில் நனைந்தவாறு சென்றனர். கனமழை காரண மாக கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதேசம யம், இந்த மழை தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயத்திற்கு உதவும் என்ப தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொழிலாளர் நலனில் கூடுதல் கவனம் தேவை: சிஐடியு

கோவை, ஜூன் 18- தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரைக்கு வர வேற்பு தெரிவித்துள்ள அதேவேளை யில், உழைக்கும் மக்களின் கோரிக் கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சிஐடியு கோவை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தற் போதைய பேரவையின் முதல் கூட் டத்தில் இருமொழிக் கொள்கை, ஊழ லற்ற நிர்வாகம், தொழில் முதலீடு போன்ற முன்னேற்ற நோக்கங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக் கது. எனினும், தமிழ்நாட்டின் வளர்ச் சிக்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஒப் பந்த மற்றும் அமைப்புசாரா தொழி லாளர்களின் வாழ்வாதார அம்சங் கள் இதில் விடுபட்டிருப்பது ஏமாற்ற மளிக்கிறது. குறிப்பாக, தொழிலா ளர்களுக்கான குறைந்தபட்ச ஊதி யம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிரான மாநில அரசின் நிலைப்பாடு குறித்து ஆளுநர் உரையில் தெளிவான அறி விப்புகள் இல்லை. கடந்த காலத்தில் மேற்கண்ட கோரிக்கைகளின் பால் தமிழக வீதிகளில் சிஐடியு எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியுள்ளதை புதிய அரசு கவனம் செலுத்த வேண் டும். மேலும், புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் சமூகப் பாதுகாப்பு, ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சியால் மட்டுமல்ல; அந்த வளர்ச்சியை உருவாக்கும் உழைக் கும் மக்களின் வாழ்க்கை தர உயர் வாலும் அளவிடப்பட வேண்டும். எனவே, ஆளுநர் உரையில் அறிவிக் கப்பட்டுள்ள முன்னேற்றத் திட்டங்க ளுடன் தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளும் முன்னுரி மையுடன் செயல்படுத்தப்பட வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

சாலை மறியல்

ஈரோடு, ஜூன் 18- ஈரோடு மாவட்டம், அம் மாபேட்டை அருகே உள்ள பெரிய குருநாதசாமி கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை. இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள், பெரிய குருநாதசாமி கோவில் அருகே புதனன்று காலிக் குடங்களுடன் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

சாலைப் பணியாளர்கள் வாயிற்கூட்டம்

திருப்பூர், ஜூன் 18- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்தில் அநீதியான முறையில் முதுநிலை பட்டியல் தயாரிக் கப்பட்ட பிரச்சனையில் மூலனூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக சாலைப் பணியாளர் சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர். மூலனூர் உட்கோட்ட அளவில் வாயிற்கூட்டம் உதவிகோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு புத னன்று நடைபெற்றது. உட்கோட்டத் தலைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்ட செயற் குழு உறுப்பினர் செ.இளங்கோவன் வரவேற்றார். கோட்ட துணைத்தலைவர் ர.செல்வகுமார், இணைச் செயலாளர் ஆ.மணிமொழி, பொருளாளர் சு.சிவராசு ஆகியோர் உரையாற்றினர். உட்கோட்ட துணைத் தலைவர் கி.தனபாலன் நன்றி கூறினார்.

கானூர் குளம் தூர்வாரும் பணி

அவிநாசி, ஜூன் 18- அவிநாசி ஒன்றியத்தில் கானூர் குளம் தூர்வாரும் பணி இரண்டாம் கட்டமாகத் தீவிரமடைந்துள்ளது. கானூர் ஏரி பாதுகாப்பு சங்கம், கோவை கௌசிகா நீர்க்கரங்கள் மற்றும் தன் னார்வலர்களின் முயற்சி யோடு, உஜ்ஜீவன் தனியார் வங்கியின் நிதி உதவியுடன் கடந்த மார்ச் மாதம் முதற் கட்டப் பணிகள் துவங்கின. இதில் கானூர் குளம் 6 அடி யில் இருந்த ஏரி கடைமடை யில் இருந்து தர்கா வரை 13 அடியாக அகலப்படுத்தப்பட் டது. 1500 யூனிட் மண்ணைக் கொண்டு கரைகள் பலப்ப டுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டப் பணி கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது குளத்தின் தென் மேற்கு எல்லையில் 30 அடி அகலம், 20 அடி உயரத்தில் துணை ஏரி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல்

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந் துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் வியாழனன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் சசிலேகா தலைமை யில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோத னையைத் தொடங்கினர். சோதனை நடத்தப் படும் தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. அலுவல கத்தின் முக்கிய நுழைவாயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. அலுவலகத்திற் குள் இருக்கும் ஊழியர்கள் தவிர, வெளிநபர் கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போல், சோதனை தொடங்குவதற்கு முன் பாக உள்ளே இருந்த நபர்கள் யாரும் வெளி யில் செல்லவும் போலீசார் அனுமதிக்க வில்லை. அலுவலகத்தின் ஒவ்வொரு பிரி வாகச் சென்று, அங்குள்ள கோப்புகள், கணி னிகள் மற்றும் கணக்கில் வராத பணம் ஏதே னும் உள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தி னர். மேலும் வாகன தணிக்கை நடைபெறும் பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டு பறி முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

பின்னலாடை நிறுவனத்தில் விபத்து கம்ப்ரசர் வெடித்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஈட்டி வீரம்பாளையத்தில் நியூ திருப் பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உள்ளது. இங்கு தனியார் (இ-லேண்ட் ஃபேஷன்) என்ற பின்னலாடை நிறுவனத்தில் ஈரோடு மாவட் டம் பெருந்துறையைச் சேர்ந்த செல்வம் (35) என்பவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்தார். வியாழனன்று நிறுவனத்தின் அய னிங் பகுதியில் ஸ்டீம் அயர்ன் (நீராவி இஸ்திரி) லீக்கேஜ் தொடர்பாக பழுது நீக்க சென்ற செல்வம், பணி செய்து கொண்டிருந் தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டீம் கம்ப்ரஸர் வெடித்து சிதறியது. இதில் தலை யின் ஒரு பகுதி சிதறி செல்வம் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய அவிநாசி போலீசார் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர் பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஆர்.எம்.எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என உறுதியளிப்பு

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் ரயில் நிலையம் வளா கத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ் அலுவலகம் மூடப்படும் என்ற தகவலை அடுத்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவ தாகவும் அறிவித்தனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஆர் எம் எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்ப டும், மூடப் போவதில்லை என்று உயர் அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதைத் தொடர்ந்து ஆர்.எம்.எஸ் ஊழியர்கள் சங்கம் புதன் கிழமை அறிவித்திருந்த உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட் டது. பின்னலாடை ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரில் உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் சிறப்பான முறையில் முக்கிய சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில் இந்த அலுவல கத்தை மூடப்போவதாக தகவல் வெளிவந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் ஒன்றிய அமைச்சருக்கு, திருப்பூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடக் கூடாது என கடிதம் எழுதினார். திருப்பூர் தொழில்துறையினர், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரை பாதிக்கக் கூடிய முடிவை கைவிட வேண்டும். ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்.எம்.எஸ் ஊழியர் சங்கத்தினர் ஜூன் 17 புதன்கிழமை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட் டம் நடத்தப் போவதாகவும் அறி வித்திருந்தனர். இதற்கிடையே உயர் அதிகாரிகள் திருப்பூர் ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை மூடப் போவதில்லை, தொடர்ந்து செயல் படும் என்று ஊழியர் தரப்பிடம் உறு தியளித்தனர். இதை ஏற்று ஊழியர் சங்கத்தி னர், ஏற்கனவே அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தாமல் கைவிட்டனர். திருப்பூர் மக்கள் பிரதிநிதிகள், தொழில் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்பின் காரண மாகவே ஆர்.எம்.எஸ் அலுவலகம் மூடும் முடிவு கைவிடப்பட்டுள்ளது. தொழில், வர்த்தக, தொழிலாளர் நலனை முன்வைத்து செயல்படக் கூடிய இந்த ஆர்.எம்.எஸ் அலுவல கத்தை மூடினால் இங்கு பணியாற் றும் ஊழியர் நலனும் பாதிக்கப்ப டும். எனவே இந்த அலுவலகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை யில் குரல் கொடுத்த அனைத்து தரப் பினருக்கும் ஊழியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு, ஜூன் 18- 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக் கில், 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி அருகே பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் அறுமுகம் என்ற ஆரான் (70). இவர் கடந்த 4.10.2023 ஆம் தேதியன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெருந் துறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார ளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடி வடைந்த நிலையில், ஆறுமுகம் என்ற ஆரானுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித் தார்.

நீட் பயிற்சி முன்பணம் மோசடி புகார் பிரபல பள்ளியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

கோவை, ஜூன் 18- நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்காக வசூலிக்கப்பட்ட முன்பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாக கூறப் படும் புகாரின் அடிப்படையில், கோவை யில் செயல்பட்டு வரும் சுகுணா பிப் சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் பிட்ஜி நிறுவ னத்தின் தலைவர் தினேஷ் குமார் கோயல் ஆகியோர் மீது பீளமேடு போலீ சார் மோசடி வழக்குப் பதிவு செய்துள் ளனர். கோவை, காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பிப் பள்ளியில், மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வுக ளுக்கான பயிற்சியை பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக ளுக்கான பயிற்சி நிறுவனத்தின் (FIITJEE) ஆசிரியர்கள் மூலம் வழங்கு வதாக கூறி, கல்விக்கட்டணத்துடன் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான கட்டண மும் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகி றது. மேலும், பயிற்சியில் சேரும் மாண வர்கள் ரூ.1 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும், பள்ளிப் படிப்பு முடிந்த பின் அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் உறுதி யளிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித் துள்ளனர். இந்த நிபந்தனையை நம்பி 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் தலா ரூ.1 லட்சம் செலுத்திய நிலை யில், படிப்பு முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் பணம் திருப்பி வழங்கப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இதுகுறித்து விக்ரம் என்ற பெற் றோர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு, சுகுணா பிப் பள்ளித்தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் பிட்ஜி தலைவர் தினேஷ் குமார் கோயல் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல கல்வி நிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கோவை கல்வி வட்டாரங் களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:55.32/105 அடி நீர்வரத்து:567 கனஅடி நீர்திறப்பு:550 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:18.38/72 அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:700கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:63.13/160 அடி நீர்வரத்து:263.07கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:62.90/120அடி நீர்வரத்து:150கனஅடி நீர்திறப்பு:347கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:35.52/60அடி நீர்வரத்து:667கனஅடி நீர்திறப்பு:759கனஅடி

பட்டியலின கவுன்சிலரின் சாதியை கூறி கொலை மிரட்டல் சிபிஎம், ததீஒமு தலையிட்டால் வழக்குப்பதிவு

நாமக்கல், ஜூன் 18- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து தலையீடு செய்த தன் பேரில் பட்டியலின கவுன்சிலரை சாதியைக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 31 ஆவது வார்டு (தனி) கவுன்சிலராக வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வரு பவர் முருகேசன். இவர் பட்டியலின பிரி வான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வராவார். அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்து தொலை பேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள் ளது. நகராட்சி தொடர்பான பிரச்சினை களை முன்வைத்து அடிக்கடி தொந்த ரவு செய்ததுடன், முருகேசனை நேரில் வருமாறு அழுத்தம் தந்து உள்ளார். கடந்த மே 25 ஆம் தேதி மீண்டும் தொடர்புகொண்ட தினேஷ், முருகேச னின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அவ தூறாக பேசியதுடன், தகாத வார்த்தை களால் திட்டி உள்ளார். பின்னர் முரு கேசன் வீட்டிற்கு நேரில் வந்து, மற்ற சில ருடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடு பட்டு, கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த சம்பவத்தின் ஒரு பகுதியை முரு கேசன் தனது கைபேசியில் பதிவு செய் துள்ளார். இதுதொடர்பாக தகுந்த ஆதாரத்து டன் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோதும் போலீசார் உரியநடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பின்னர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நக ரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் காவல்துறையினரிடம் வலியுறுத் தியதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15 ஆம் தேதி தினேஷ் மீது தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்குப்பதிவு செய் யப்பட்டும் குற்றம் சாட்டப்பட்ட நபர் இது வரை கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், உடனடியாக கைது செய்து சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கு பிணை வழங்கக்கூடாது என வலியு றுத்தியுள்ளனர். இதையடுத்து அண்மையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில தலைவர்களில் ஒருவரான பி.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, மாவட்டப் பொருளாளர் ஆர்.சண்முகம், மாவட்ட துணைச் செய லாளர் ஏ.டி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகரச் செயலாளர் சீனிவாசன், முன் னாள் செயலாளர் ஐ.ராயப்பன் உள் ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்ட கவுன்சிலர் முருகேசனை நேரில் சந் தித்து ஆறுதல் கூறியதுடன், காவல் துறையினரை சந்தித்து வழக்கின் விசா ரணையை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.