கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
3 hours before

தீப்பிடித்த லாரி

திருப்பூர், அக்.4-கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இருந்து கார்பன்டை ஆக்ஸைடுடன் கன்டெய்னர் லாரி, கோவை மாவட்டம், சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவிநாசி தேசிய நெடுஞ்சாலை நாதம்பாளையம் பிரிவு அருகே வெள்ளியன்று இரவு வந்தபோது, எதிர்பாரதவிதமாக லாரியின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதையடுத்து உள்ளிருந்த ஓட்டுநர், உதவியாளா் உடனடியாக லாரியில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குடியிருப்பைச்சுற்றி முகாமிட்ட யானைகள்

கோவை, அக்.4-வால்பாறையை அடுத்த மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சுற்றி யானைகள் முகாமிட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்னர்.

கோவை மாவட்டம், வால்பாறை, தமிழக - கேரளா எல்லையில் அதிரப்பள்ளி ஊராட்சி, மளுக்கப்பாறை எஸ்டேட் புதுக்காடு டிவிஷன் சந்தன மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 16 யானைகள் கொண்ட குழு முகாமிட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தற்போது தமிழக -கேரளா எல்லையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழகத்தை நோக்கி பயணிப்பதால், தற்போது

கேரளா எல்லையின் முடிவுப்பகுதிக்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என கேரளா வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். யானைகள நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளை மின்தடை

தருமபுரி, அக்.4-தருமபுரி துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூர், கொள கத்தூர், குண்டல்பட்டி, எ.ஜெட்டிஅள்ளி, எ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, எ.கொல்ல அள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூல அள்ளி, குப்பூர், சோலைக்கொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி புறவழிச்சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காதென மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று மின்தடை

திருப்பூர், அக்.4-திருப்பூர் மாவட்டம், கருவலூர் துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் கருவலூர், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காதுதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக நோட்டமிட்ட சிறுத்தை

கோவை, அக்.4-வால்பாறையை அடுத்த சவரங்காடு தேயிலை காட்டிற்குள் சிறுத்தை ஒன்று உணவுகாக நோட்டமிட்டு ஓய்வெடுக்கும் நிகழ்வை சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தது, தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று மாலை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் கோழி, நாய், கன்றுக் குட்டி உள்ளிட்ட வீட்டு விலங்குகள் உள்ளதா?என நோட்டமிட்டு அங்கு ஓய்வெடுத்திருந்தது. அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அதனை படம்பிடித்தது, தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரம் அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த தீட்சித்தன் என்பவரை இழுத்துச்சென்றது அனைவருக்கும் அறிந்ததே. இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யானையிடமிருந்து தப்பிய வாகன ஓட்டி!

உதகை, அக்.4-கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் உலா வந்த யானையிடமிருந்து இருசக்கர வாகன ஓட்டி தப்பிய நிலையில், அவரை யானை ஆக்ரோசமாக தாக்க வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், புத்தூர் வயல் பகுதியில் அதிகாலை நேரத்தில் நுழைந்த யானையை கண்டு மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்தனர். வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.இந்நிலையில், சனியன்று இரவு லாரி ஓட்டுநர் ஒருவர், மூன்றாம் மைல் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்ல தயாரான போது, திடீரென மிக அருகில் யானை அவரை தாக்க முற்பட்டுள்ளது. உடனடியாக லாரி ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி யானையிடம் இருந்து நூலிழையில் தப்பித்தார். சில அடி தூரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, யானை பிளிறிக்கொண்டு அவரை தாக்க ஓடிவந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.