தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்

10 May 2026, 12:37 am
அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்

அக்கினிச் சிறகுகளுக்கு அடியில்... ஒரு குளிர்ந்த மண்வாசம்

தொழிற்சாலைகளின் சத்தம், எந்நேரமும் சுழலும் எந் திரங்கள், பரபரப்பான சாலைகள் - இதுதான் கோவையின் அடையா ளம். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் கோவைக்கு ஒரு புதிய வர்ணத்தைப் பூசியிருக்கிறது.

ஒருபுறம் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, மறுபுறம் மாலையில் குளுமையூட் டும் திடீர் மழை என கோவையின் கால நிலை ஒரு கண்ணாமூச்சி ஆட்டத் தைத் தந்து வருகிறது.

இந்த விசித் திரமான வானிலை மாற்றத்திற்கு நடுவே, கோவையின் சாலைகள் இப் போது ‘குளிர்ச்சித் திருவிழா’ நடக் கும் இடமாக மாறியிருக்கின்றன.

உக்கடம் முதல் காந்திபுரம் வரை, சிங்காநல்லூர் முதல் சாய்பாபா காலனி வரை என மாநகரத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் தர்பூ சணி மற்றும் நுங்கு விற்பனை நிலை யங்கள் கண்கள் குளிரக் காட்சி அளிக்கின்றன.

சிவப்பு நிறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தர்பூ சணித் துண்டுகள், வெயிலின் தாகத் தைத் தணிக்க வழிப்போக்கர்களை வசியப்படுத்துகின்றன.

“ஃபிரிட்ஜ் தண்ணீரை விட இதுதான் உடம்புக்கு நல்லது” எனப் பேசிக்கொண்டே லாரி ஓட்டுநர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை தர்பூசணி கடைகளில் தஞ்சம் புகுவதை காண முடிகிறது.

இந்தக் கோடையில், கிராமத்துத் தெருக்களில் மட்டுமே ஒலித்த கம் மங்கூழ் குரல், இன்று அவிநாசி சாலையிலும், திருச்சி சாலையிலும் கம்பீரமாக கடை விரித்து காணப்படு கிறது.

மண் பானைகளில் தயிர் ஊற்றி, சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்துப் பரிமாறப்படும் கம்மங் கூழுக்கு இளைஞர்களை ஈர்த்து வரு கிறது.

பீட்சா, பர்கர் கலாசாரத்தைத் தாண்டி, உடலுக்கு குளிர்ச்சி தரும் பாரம்பரிய உணவுகளை நோக்கி இன்றைய தலைமுறை திரும்புவது ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

“ஒரு நுங்கு சாப் பிட்டா உடம்பே குளிர்ந்து போகு துங்க...” - இது நுங்கு விற்பனையா ளரை சூழ்ந்து நிற்கும் வாடிக்கையா ளர் ஒருவரின் திருப்தியான குரல்.

மாலையில் திடீரெனப் பெய்யும் மழை, இந்த சிறு வியாபாரிக ளுக்கு சிறு இடையூறைத் தந்தா லும், அவர்களின் உத்வேகத்தைக் குறைக்கவில்லை.

மழை வரும் போது தார்பாய் போட்டுப் பழங் களைப் பாதுகாக்கும் இவர்கள், மழை நின்ற அடுத்த ஐந்தாவது நிமி டம் மீண்டும் கடையைத் திறந்து விடு கிறார்கள்.

வெயிலும் மழையும் மாறி மாறி வந்தாலும், வியாபாரம் குறை யலைங்க.

மக்கள் எப்போதுமே இயற்கையான குளிர்ச்சியை தேடித் தான் வர்றாங்க என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஒரு கம்மங்கூழ் விற்பனை யாளர்.

இந்த கோடை காலம் பல எளிய குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது.

அதிக முதலீடு இன்றி, உழைப்பை மட்டுமே மூலதன மாகக் கொண்டு, காலையில் மார்க் கெட்டில் பழங்களை வாங்கி வந்து மாலையில் விற்றுத் தீர்க்கும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கோவை யின் பொருளாதாரத்திற்கு ஒரு சிறு பங்களிப்பைச் செய்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால்... கோவையின் இந்தக் கோடை வெறும் வெப்பத்தை மட்டும் தரவில்லை; மாறாக சிறு வியாபாரிகளின் உழைப்பையும், இயற்கையை நேசிக்கும் மக்களின் மனநிலையை யும் பறைசாற்றுகிறது.

சாலைகளில் தென்படும் ஒவ்வொரு இளநீர் கடை யும், நுங்கு விற்பனை வண்டியும் கோயம்புத்தூரின் தாகம் தீர்க்கும் ‘பசுமைப் புரட்சியாகவே’ காட்சி யளிக்கின்றன. வெயில் வந்தென்ன... மழை வந் தென்ன... கோவையின் வேகம் மட் டும் என்றுமே குறைவதில்லை! - ஆசாத்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.