60 நாட்களாக குடிநீர் வரவில்லை: மக்கள் மறியல்
5 Oct 2026, 1:15 am
<p><strong>60 நாட்களாக குடிநீர் வரவில்லை: மக்கள் மறியல்</strong></p><p>கோவை, அக்.4-சூலூர் அருகே குடிநீர் விநியோகம் சீராக இல்லாததை கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கும், குடிநீருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள், ஞாயிறன்று காலை பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியல் காரணமாக, நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியதால், காவல் துறையினர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.</p>
