குற்றத்தை நியாயப்படுத்தாதீர்! - அ. ராதிகா
27 May 2026, 8:45 pm

குற்றத்தை நியாயப்படுத்தாதீர்! - அ. ராதிகா

கோவை சூலூரில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தைப் பதற வைத்துள்ளது.

ஒரு பச்சிளம் குழந்தை கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலிலும், சிலர் மனிதநேய மற்று நடப்பது பெரும் வேதனை.

சமூக வலைதளங்களில் சில ஆளுங்கட்சி ஆதரவாளர்கள், குற்றத்தின் தீவிரத்தைப் பேசு வதற்குப் பதிலாக ஆட்சியின் ‘இமேஜைக்’ காக்கக் குற்றத்தை மடைமாற்றுகின்றனர்.

பாதிக்கப்பட்ட தாயை இழிவுபடுத்துவதும், “அவர் மது அருந்தியிருந்தார்” என்று அவதூறு பரப்புவதும், அவரது நடத்தைக் குறித்து விவாதிப்பதும் குற்றவாளிகளை நியாயப்படுத்தும் செயலாகும். பாதிக்கப்பட்டவர்களையே குற்ற வாளியாக்கும் இந்த விஷப் பிரச்சாரப் போக்கு, நடந்த குற்றத் திற்குச் சளைக்காத பெருங்குற்ற மாகும்.

எந்த அரசாக இருந்தாலும், ஆதரவு என்ற பெயரில் இத்தகைய கொடூரக் குற்றங்களை மூடிமறைக்க முடியாது.

எனவே, பொறுப்புணர்வோடு அரசு செயல்பட வேண்டும். காவல்துறையின் அணுகு முறையும் கேள்விகளை எழுப்பு கிறது.

தாய்க்கு முழுமையாகத் தெரியப்படுத்தாமல் குழந்தை யின் உடல் அவசரமாக எரியூட்டப் பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

பெற்ற மகளைக் கடைசியாகப் பார்க்க வேண்டிய தாயின் உரிமை கூட இங்கே மதிக்கப்படவில்லையா? மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் சில அதிகாரிகள் சிரித்தபடி நடந்துகொண்ட காட்சி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கே இருக்க வேண்டியது அதி காரத்தின் பொறுப்புணர்வே தவிர, கொண்டாட்ட மனநிலை அல்ல.

குழந்தைக்காக நீதி கேட்பதை விடுத்து, தாயின் நடத்தைப் பற்றிப் பேசும் சமூகமாக நாம் மாறினால் அது சமூகத்தின் ஒட்டுமொத்தத் தோல்வி.

குற்றத்தை நியாயப்படுத்தும் அரசியலும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் எழுத்தும் தொடர் குற்றங்களுக்கே வழிவகுக்கும்.